ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி
கல்லூரி படிப்பை படித்து முடித்து விட்டு,வெளியே வந்தஉடனே
நான் விரும்பிய ஆசிரியர் பணி சொந்த ஊரில் கிடைத்த போது
மகிழ்ச்சியாக தான் இருந்தது.

ஆனால் எனக்கு ஓதுக்கபட்ட பாடம் Engineering Drawing.படிக்கும் போது ஓன்றுமே விளங்காத பாடம்அப்படினு கூட சொல்லலாம். கல்லூரியில் கிடைத்த அருமையான நண்பர்கள் மற்றும் நல்ல புத்தகங்கள் (படிக்கும் போது அந்த புத்தகங்களை பார்த்ததேயில்லை) உதவியுடன் ஒரு மாதிரி சமாளித்தேன்.

ஆனால் அடிக்கடி மனதில் உதிக்கும் கேள்வி., நமக்கு இந்த வேலைக்கு தேவையான பொறுமையும்,பொறுப்பும் உண்டா என்று?ஆனால் மாணவ நண்பர்களின் அருமையான ஓத்துழைப்பு ,அவர்களின் தேர்ச்சி விகிதம் ஆகியவற்றின் காரணமாக அந்த எண்ணம் சிறிது சிறிதாக மறைய தொடங்கியது.

கைநிறைய சம்பளம் வாங்க விட்டாலும் ,மனம் நிறைவான சம்பளம் வாங்கி வாழ்க்கை ஓட தொடங்கியது ஒரு வருடத்திற்கு பிறகு ஆசிரியர் பணி விட்டு ராஜினாமா செய்த போது கூட பெரிய வருத்தம் இல்லை. ஆனால் கடைசி நாள் கல்லூரியை விட்டு வந்த போது கண் கலங்கியது உண்மை.அடுத்த வேலை பற்றி கவலையால் அல்ல அது.அந்த அருமையான நண்பர்கள் மற்றும் வேலை செயத சூழ்நிலையை விட்டு விலகிசெல்கிறோம் என்பதை நினைத்து தான்.

இப்போது பொருளாதர தேவைக்காக ஓமன் நாட்டில் பொறியாளர் பணி .விரைவில் மீண்டும் ஆசிரியர் பணி தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது.

Drawing பாடத்தில் அடிப்படையை சொல்லிகொடுத்த RKN Sir க்கும் ,முதல் நாள் எப்படி வகுப்பு எடுப்பது என்று சொன்ன VS sir இதன் முலம் நன்றி தெரிவித்து கொள்கிறேன்..

4 கருத்துகள்:

guru சொன்னது…

//இப்போது பொருளாதர தேவைக்காக ஓமன் நாட்டில் பொறியாளர்.//

நன்பா நாம் எல்லாம் ஒன்னுதான் வருத்தபடவேண்டாம்.

மின்னல் சொன்னது…

நன்றி குரு.ஆம்.பெரும்பாலும் ஓன்று தான்.

வடுவூர் குமார் சொன்னது…

நல்ல எண்ணம். இன்றிருக்கும் ஆசிரியர்கள் பலரின் ஆரம்ப Knowledge கவலைக்குரியதாகவே இருக்கு.

மின்னல் சொன்னது…

ஆம்.சரி தான் குமார்.படித்த வுடன் ஆசிரியர் பணிக்கு செல்வதை விட field experience யுடன் சென்றால் நன்றாக பணியாற்றலாம்.நன்றி.

கருத்துரையிடுக