சலாலா தமிழ் சங்கம்


சலாலா தமிழ் சங்கம் சமீபத்தில் இலவச மருத்துபரிசோதனை முகாமை வெற்றிகரமாக நடத்தியது.ஏராளமான தமிழ் பேசும் நல் உள்ளகளை சந்தித்தது மனதுக்கு ஆறுதல் அளித்தது.

வருந்துகிறேன்


ஓமனில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த நண்பன் ஜேக்கபின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை கண்ணிரோடு தெரிவித்துகொள்கிறேன்.உன்னை இது மாதிரி ஊருக்கு அனுப்பி வைப்பேன் என்று நான் நினைக்கவில்லை நண்பா.பழகிய நாட்கள் கொஞ்சம் என்றாலும் விட்டு சென்ற நினைவுகள் ஏராளம் உன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.

பென்சில்


பெரும்பாலும் பென்சில் வாங்கும்போது நடராஜ் கம்பெனியா,கேம்பிலின் கம்பெனியா என்று பார்த்து வாங்குவோம்.ஆனால் பென்சிலின் மேல்பகுதியில் எச்பி,2 எச்பி மற்றும் 2எச் என போட்டிருக்கும் .அதை அனைவரும் கவனித்து இருப்பிர்களா என தெரியவில்லை.எச் என்றால் ஹார்டு, என்றும் பி என்றால் பிளாக் என்றும் அர்த்தம்.அது பென்சிலில் உள்ள கிராஃபைட் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளது ,எந்த அளவுக்கு கருப்பாக எழுதும் என்பதை தெரிவிக்கும்.

2 எச்பி, மற்றும் 2 எச் போன்ற பென்சில்கள் பொறியியல் வரைபடங்கள் வரைய அதிகம் பயன்படுகின்றது.இப்போது மைக்ரோடிப் போன்ற நவீன வகை பென்சில்கள் அதிகமாக உபயோகத்தில் உள்ளன.

ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி




கல்லூரி படிப்பை படித்து முடித்து விட்டு,வெளியே வந்தஉடனே
நான் விரும்பிய ஆசிரியர் பணி சொந்த ஊரில் கிடைத்த போது
மகிழ்ச்சியாக தான் இருந்தது.

ஆனால் எனக்கு ஓதுக்கபட்ட பாடம் Engineering Drawing.படிக்கும் போது ஓன்றுமே விளங்காத பாடம்அப்படினு கூட சொல்லலாம். கல்லூரியில் கிடைத்த அருமையான நண்பர்கள் மற்றும் நல்ல புத்தகங்கள் (படிக்கும் போது அந்த புத்தகங்களை பார்த்ததேயில்லை) உதவியுடன் ஒரு மாதிரி சமாளித்தேன்.

ஆனால் அடிக்கடி மனதில் உதிக்கும் கேள்வி., நமக்கு இந்த வேலைக்கு தேவையான பொறுமையும்,பொறுப்பும் உண்டா என்று?ஆனால் மாணவ நண்பர்களின் அருமையான ஓத்துழைப்பு ,அவர்களின் தேர்ச்சி விகிதம் ஆகியவற்றின் காரணமாக அந்த எண்ணம் சிறிது சிறிதாக மறைய தொடங்கியது.

கைநிறைய சம்பளம் வாங்க விட்டாலும் ,மனம் நிறைவான சம்பளம் வாங்கி வாழ்க்கை ஓட தொடங்கியது ஒரு வருடத்திற்கு பிறகு ஆசிரியர் பணி விட்டு ராஜினாமா செய்த போது கூட பெரிய வருத்தம் இல்லை. ஆனால் கடைசி நாள் கல்லூரியை விட்டு வந்த போது கண் கலங்கியது உண்மை.அடுத்த வேலை பற்றி கவலையால் அல்ல அது.அந்த அருமையான நண்பர்கள் மற்றும் வேலை செயத சூழ்நிலையை விட்டு விலகிசெல்கிறோம் என்பதை நினைத்து தான்.

இப்போது பொருளாதர தேவைக்காக ஓமன் நாட்டில் பொறியாளர் பணி .விரைவில் மீண்டும் ஆசிரியர் பணி தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது.

Drawing பாடத்தில் அடிப்படையை சொல்லிகொடுத்த RKN Sir க்கும் ,முதல் நாள் எப்படி வகுப்பு எடுப்பது என்று சொன்ன VS sir இதன் முலம் நன்றி தெரிவித்து கொள்கிறேன்..

டிரைவிங் லைசன்ஸ்


ஓமன் நாட்டில் டிரைவிங் லைசன்ஸ்
எடுக்கணும்னா நான்கு நிலைகளை கடந்தாக
வேன்டும்.

முதல் நிலை கண் பரிசோதனை.
அநேகமாக அனைவரும் முதல் டெஸ்ட்டில் தேர்வாகி விடலாம்..
நம்ம எல்லோருக்கும் அறிமுகமான முறைதான்..கண் பரிசோதனைக்கு
டாக்டர் கேட்பதுபோல் ஆங்கில எழுத்துகளை ( விதவித மான அளவில் ) பற்றி கேட்பார்கள்.

இரண்டாவது நிலை டிரம் டெஸ்ட்..
ஆங்கில எழுத்து டி வடிவில் வரிசையாக டிரம் இருக்கும்..அதன் உள்ளே புகுந்து முன்நோக்கி ஒருமுறையும்,பின்னோக்கி ஒருமுறையும் வரவேண்டும்.வாழ்க்கை கம்பிமேல நடக்கிற மாதிரி இருக்குதுன்னு சொல்வாங்கள அதுமாதிரி இருக்கும்..
இது பார்கிங் நல்லா பண்ணுவதற்கு காக..

மூன்றாவது நிலை ஃகில் (Hill) டெஸ்ட்.
ஒரு சிறிய மலையில் ,மலை உச்சிக்கு அருகில் காரை நிறுத்தி , பிறகு எடுக்க வேண்டும்.எடுக்கும் போது ,கார் பின்னோக்கி வரக்கூடாது.அங்கதாங்க பிரச்சனை..பிரேக்கில் இருந்து கால்லை எடுக்கும் போது கார் பின்னோக்கி வர வாய்ப்பு அதிகம்.

நான்காவது நிலை ரோடு டெஸ்ட்..சுமார் பத்து முதல் இருபது நிமிடம் வரை நேர்மையான போலிஸ் நம்முடன் பயணிப்பார்..இன்டிக்கேட்டர் முதலான சுமார் இருபத்தி இரண்டு அம்சங்களை பார்ப்பார்கள்..

ஓமன் நாட்டில் டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு , வாகனம் நன்றாக ஓட்ட தெரிந்தாலும் லக் மற்றும் அதிக முறை முயற்சி வேண்டும் என்பதால் ,பல பேருக்கு டிரைவிங் லைசன்ஸ் Tryரைவிங் லைசன்ஸ் ஆகவே இருக்கிறது.

முதல் பதிவு

நீர் இன்றி உலகு இல்லை..அது போல் நண்பர்கள் இன்றி நான் இல்லை. புதிய நண்பர்களுடன் கருத்துக்களை பரிமாறிகொள்வதற்குகாக ,இனையத்தில் புதிய வலைப்பூவை இன்று நடுகிறேன்.அதை நீங்கள் நீர் ஊற்றீ வளர்ப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை

இந்த தருணத்தில்,குமுதத்தில் நான் எழுதியைதை எனக்கு முன்பாகவே பார்த்து என்னிடம் சொல்லியது முதல் ,அப்போதே இனையத்தில் எழுதுடா என்று என்னை ஊக்கபடுத்திய என்னுடைய நண்பன் முத்து அதாங்க உங்க ஆயில்யன்னை ,நட்போடு நினைத்து பார்க்கீறேன்.