டிரைவிங் லைசன்ஸ்


ஓமன் நாட்டில் டிரைவிங் லைசன்ஸ்
எடுக்கணும்னா நான்கு நிலைகளை கடந்தாக
வேன்டும்.

முதல் நிலை கண் பரிசோதனை.
அநேகமாக அனைவரும் முதல் டெஸ்ட்டில் தேர்வாகி விடலாம்..
நம்ம எல்லோருக்கும் அறிமுகமான முறைதான்..கண் பரிசோதனைக்கு
டாக்டர் கேட்பதுபோல் ஆங்கில எழுத்துகளை ( விதவித மான அளவில் ) பற்றி கேட்பார்கள்.

இரண்டாவது நிலை டிரம் டெஸ்ட்..
ஆங்கில எழுத்து டி வடிவில் வரிசையாக டிரம் இருக்கும்..அதன் உள்ளே புகுந்து முன்நோக்கி ஒருமுறையும்,பின்னோக்கி ஒருமுறையும் வரவேண்டும்.வாழ்க்கை கம்பிமேல நடக்கிற மாதிரி இருக்குதுன்னு சொல்வாங்கள அதுமாதிரி இருக்கும்..
இது பார்கிங் நல்லா பண்ணுவதற்கு காக..

மூன்றாவது நிலை ஃகில் (Hill) டெஸ்ட்.
ஒரு சிறிய மலையில் ,மலை உச்சிக்கு அருகில் காரை நிறுத்தி , பிறகு எடுக்க வேண்டும்.எடுக்கும் போது ,கார் பின்னோக்கி வரக்கூடாது.அங்கதாங்க பிரச்சனை..பிரேக்கில் இருந்து கால்லை எடுக்கும் போது கார் பின்னோக்கி வர வாய்ப்பு அதிகம்.

நான்காவது நிலை ரோடு டெஸ்ட்..சுமார் பத்து முதல் இருபது நிமிடம் வரை நேர்மையான போலிஸ் நம்முடன் பயணிப்பார்..இன்டிக்கேட்டர் முதலான சுமார் இருபத்தி இரண்டு அம்சங்களை பார்ப்பார்கள்..

ஓமன் நாட்டில் டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு , வாகனம் நன்றாக ஓட்ட தெரிந்தாலும் லக் மற்றும் அதிக முறை முயற்சி வேண்டும் என்பதால் ,பல பேருக்கு டிரைவிங் லைசன்ஸ் Tryரைவிங் லைசன்ஸ் ஆகவே இருக்கிறது.

10 கருத்துகள்:

ஆயில்யன் சொன்னது…

//பல பேருக்கு டிரைவிங் லைசன்ஸ் Tryரைவிங் லைசன்ஸ் //

நச் கமெண்ட்!

Sarathguru Vijayananda சொன்னது…

நம்மூர்ல கல்ப் அடிச்சுட்டு ஒரு கல்ப் உங்களுக்கும் உண்டுனு சொல்லிட்ட லைசன்ஸ் சைலண்ட்டா வாக்கிட்டு போயிடலாம். ஓமன் நாட்டில் மட்டுமா அல்லது இதர வளைகுடா நாடுகளிலும் இந்தக் கதைதானே மின்னல். அவர்களின் இந்த அமைப்பை நான் பெரிதும் வரவேற்கிறேன்.

மின்னல் சொன்னது…

மிக்க நன்றி ஆயீல்யன் நண்பா
கத்தார் அனுபவமும் இது மாதிரிதானே?

மின்னல் சொன்னது…

மிக்க நன்றி சரத்

தேவியர் இல்லம் ஜோதிஜி சொன்னது…

நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

Rithu`s Dad சொன்னது…

வணக்கம்.. வாழ்த்துக்கள்.. சரி நீங்க லைசென்ஸ் எடுத்துட்டீங்களா.. !! ரோடுக்கும் வாழ்க்கைக்கும்!! ;)

மின்னல் சொன்னது…

Rithu Dad வாழ்த்தியதுக்கு நன்றி .லைசென்ஸ் எடுத்ததை பற்றி ஓரு பதிவு போடலாம்.ரோடு ஓ.கே. ஆயிற்று வாழ்க்கை இன்னும் ஆக வில்லை.

வடுவூர் குமார் சொன்னது…

நான் கூட எடுக்கலாமா என்று யோசித்து 300 ரியாலுக்கு மேல் ஆகும் என்ற உடன் விட்டுவிட்டேன்.
இங்கேயே இருப்போம் என்றால் எடுப்பது நல்லது.

மின்னல் சொன்னது…

ஆம் நீங்கள் சொல்வதும் சரி தான் குமார் எனக்கு 350 ரியால் ஆயிற்று.

தீபக் வாசுதேவன் சொன்னது…

>>>>
ஓமன் நாட்டில் டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு , வாகனம் நன்றாக ஓட்ட தெரிந்தாலும் லக் மற்றும் அதிக முறை முயற்சி வேண்டும் என்பதால் ,பல பேருக்கு டிரைவிங் லைசன்ஸ் Tryரைவிங் லைசன்ஸ் ஆகவே இருக்கிறது.
<<<<
நம்மூரு மாதிரி 'முக்கியமான' பேப்பர் வச்ச கிடைச்சுப்புடாதா? "ஆபீசர். பன்னீ செல்வம் நு உங்க பெற கைஎழுத்தா போடுங்க ஆபீசர்" என்று நமக்கு 'உதவ' ஏஜெந்ட்கள்?

கருத்துரையிடுக