பிளாட்

எலி வலையாய் இருந்தாலும் தனி வலையாய் இருக்கவேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப புதிய வீடு கட்டுவதற்காக இப்போது தனியாக பிளாட் வாங்க கிளம்பிட்டிங்களா?

ஒரு நிமிடம் .

நீங்க வாங்க போகும் வீட்டின் அளவு ,மற்றும் வடிவம் பற்றிய பதிவு தான் இது

வீட்டுமனையின் அளவு கண்டிப்பாக உங்களின் கையிருப்பின் அளவை பொறுத்ததுதான் ஆகும் .இருந்தாலும் பிளாட்டின் அளவு என்பது 60*40 அடியாக தான் இருக்கும்.மொத்த சதுர அடி 2400 சதுர அடியாகும்.பெரும்பாலும் 750 சதுர அடியில் வீடு கட்டுவதால் அரை பிளாட் 1200 சதுர அடியே போதுமானது தான்

அடுத்தது வீட்டு மனையின் வடிவம்.

நாம் அமைக்கும் அறைகளின் வடிவம் செவ்வக அல்லது சதுர வடிவமாகவே இருப்பதால் பெரும்பாலும் செவ்வக அல்லது சதுர வடிவ வீட்டு மனையே சிறந்தது.அது மாதிரி வீட்டுமனை இருந்தால் கட்டுமானத்தின் போது பிளாட்டின் அனைத்தும் பகுதிகளும் பயன்படுத்துவதால் இடம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் அறைகளும் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும்.உதாரணமாக கட்டில் இடுவது,பீரோவை அமைப்பது போன்ற வகைகளை எளிதாக பயன்படுத்தலாம்.

இந்த மாதிரி வடிவத்திற்கு முன்னுரிமை அளிக்கலாம்


இந்த மாதிரி வடிவங்களை தவிர்த்தல் நலம்.



அடுத்தது வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம் பற்றிய பல விபரங்கள் உங்களக்கு தெரிந்து இருக்கும்.எனவே நான் பொறியியல் மற்றும் அறிவியல் பார்வையில் வாஸ்து பற்றி எனக்கு தெரிந்ததை உங்களளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கிழக்கு,மேற்கு,வடக்கு, மற்றும் தெற்கு என்ற வகையில் திசைகளை பொதுவாக நான்கு வகையாக பிரிக்கலாம்.ஆனால் வாஸ்துவில் திசைகளை வடகிழக்கு,வடமேற்கு,தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு என்ற வகையில் மேலும் பிரிக்கலாம்.

படத்தை பாருங்க.உங்களுக்கே தெரியும்.




அவ்வாறு பிரித்த திசைகளுக்கு பெயர் பின்வருமாறு அழைக்கப்படுகிறது.

வடகிழக்கு - ஈசானிய மூலை
வடமேற்கு - வாயு மூலை
தென்கிழக்கு - அக்னி மூலை


அடுத்த பதிவிலும் வாஸ்து பற்றிய அறிவியல் பார்வை தொடரும்.

(அ) ஆரம்பப் பள்ளி

இங்கு தான் நான் முதல்முறையாக அ,ஆ,........படித்த இடம் என்பதை பெருமையுடன் சொல்லுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த முறை ஊருக்கு போனபோது என் பள்ளியை பார்த்த போது பல நினைவுகள் திரும்பி பார்த்தன.

1959 ம் ஆரம்பிக்கப் பட்டாலும் நான் படிக்கும் போது எப்படி இருந்ததோ அது மாதிரி தான் இருந்தது.ஆனால் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது போல் தெரிகிறது.(எல்லாம் புதிதாக வளர்ந்துள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகளால் தாங்க)



படிக்கும் போது எனக்கு ஆனா,ஆவண்ணா (அ,ஆ,இ,...அப்படி சொல்லி கொடுத்தால் கஷ்டமா இருக்கும்ல)சொல்லி கொடுத்த ஆசிரியர் தியாகராஜன் ஒய்வு பெற்று பள்ளிக்கு மிக அருகில் வசித்து வருகிறார்.இவர் ஆசிரியர் மட்டும் அல்ல.நல்ல கர்நாடக இசை பாடகரும் கூட.அவர் மேடையில் பாடும் போது அதன் அர்த்தம் புரியாவிட்டாலும் அவரது முக மாற்றங்கள் மற்றும் ராகத்திற்கு ஏற்ற கைஅசைவுகள் வசீகரமான குரல் ஆகியவவைகள் மிகவும் பிடிக்கும்.

தங்கையின் திருமணத்திற்கு சாரும் வந்த போது வேலை எப்படி இருக்கு? உணவு எப்படி இருக்கு?என்று என்னை பற்றிய சிந்தனை அவருக்குள் இருந்ததை உணர முடிந்தது. இது மாதிரி ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தது பாக்கியம் தான் .

அடுத்ததா நினைவுக்கு வரும் டிச்சர் பால்பினா டிச்சர்.தொடக்கப்பள்ளி என்பதால் விளையாட்டுக்கு அதிக முக்கியதுவம் இல்லாமல் இருந்தது .டிச்சர் வந்த பிறகு நிலையே வேறு.அவர்கள் நடத்திய ஓட்டப்பந்தயம் அப்போது வித்தியாசமான அனுபவம் தான்.

அப்புறம் தேர்வு சமயத்தில் இங்கு முக்கிய கேள்விகள் தந்து விடுவார்கள்.எனவே தேர்வு எல்லாம் சுமையாக தெரிந்ததில்லை.

நான் படித்த ஆரம்ப பள்ளிக்கு இதுவரை நான் சொல்லி கொள்ளும் அளவு எதுவும் செய்யாதது நெருடலாக தான் இருக்கிறது.அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பாக ஏதாவது செய்யனும் என்ற முடிவோடு தான் இருக்கிறேன்.

குசேலன் படம் பார்த்த போது நண்பர்களின் நினைவுகளால் வந்த கண்ணீரை தவிர்க்க இயலவில்லை. எனக்கு கூட சில நண்பர்கள் (முருகராஜ்,சுந்தர் மற்றும் மணி ) ஆகியோர் அந்தப்பள்ளி பருவத்தில் கிடைத்து இன்னமும் நண்பர்களாக தொடர்வதில் சந்தோசம் தாங்க.

அப்புறம் பள்ளி மூலம் கிடைத்த பால்ய நண்பன் சுந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்