ஒட்டகங்கள்

படிக்கும் காலத்தில் பாலைவன கப்பல் எது என்ற கேள்விக்கு பதிலாக தான் ஒட்டகம் அறிமுகம் ஆனது .அதன் பிறகு அப்ப அப்ப சர்க்கஸ் சென்றால் அங்கு அழகிகளின் அணி வகுப்பு மாதிரி ஓட்டங்களின் அணிவகுப்பை பார்த்த அனுபவம் உண்டு.

அப்புறம் இங்கு வந்த பிறகு பாலைவனத்தில் வேலை பார்க்க நேர்ந்த போது ஒட்டகத்தை பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நம்ம ஊர்ல ஆடு,மாடு வளர்ப்பதை போல் இங்கு ஓமனில் ஒட்டகத்தை வீட்டில் வளர்க்கிறார்கள்.ஒரே வித்தியாசம் பெட்ரோல் விலை குறைவு என்பதால் கார்ல சென்று ஒட்டகத்தை மேய்க்கிறார்கள்.பல சமயங்களில் உரிமையாளர்களுடன் உரிமையாக குழந்தை போல் பழகுகிறது.உருவம் தான் பெரியது.குழந்தை மனசு தான் போல.

அது மாதிரி ஒட்டகம் சாலையில் கடக்க நேர்ந்தால் ஒட்டகத்திற்கு வழி விட்டு தான்,பின்னர் அனைவரும் வாகனத்தில் சாலையை கடக்கிறார்கள்.மரியாதைக்கு இல்லங்க .பயம் தான்.ஒட்டகத்தின் மீது மோதினால் வாகனத்திற்கு அதிக சேதாரம் ஏற்படுவதுடன் செய்கூலியாக சுமார் ஒரு இலட்சம் வரை (ஒட்டகம் இறக்க நேர்ந்தால்) அபராதம் விதிக்கப்படுகிறது.



ஒட்டகத்தின் முரட்டு நாக்கில் இருக்கும் சுவை அரும்புகள் படு மந்தமாம்.எனவே பலசமயங்களில் காய்ந்து போன குச்சிகள்,உலர்த்த இலை,தழைகளை என்று கிடைத்ததையெல்லாம் சாப்பிடுகிறது.தண்ணிர் தேவை பெரிய பிரச்சனையே இல்லை.அதற்கு பதில் எச்சிலை உபயோகிக்கிறது.அது மாதிரி சமயங்களில் எச்சிலின் அளவு 100 முதல் 180 லிட்டர் வரை சுரக்குமாம்.மேலும் சில ஒட்டகங்களுக்கு நீந்த தெரியுமாம்.

அப்புறம் ஒட்டக பால்.நண்பர்களின் வற்புறுத்தலினால் ஒரு முறை ஒட்டக பால் சாப்பிட நேர்ந்தது.சாப்பிட்ட பிறகு கடுமையான வயிற்று போக்கு..எல்லாம் முடிந்த பிறகு நண்பர் சொன்னார் முதல் முறையாக சாப்பிட்டால் அப்படி தான் இருக்கும்.அடுத்த முறை முயலலாமா என்று?

நன்றி ஆனந்தகுமாரின் பல்துறை தகவல்கள்

மெழுகு வர்த்தி

மெழுகு வர்த்தி தயாரிக்கும் முறை

தேவையான பொருள்கள்

வெள்ளை மெழுகு - 5 கிலோ
ஸ்டெரிக் ஆசிட்- 1.5 கிலோ
ஸின்க் ஆக்சைட் - 200 கிராம்

தேவையான அகல நீளத்தில் மோல்டுகள் (தகரக் குழாய்களில்) தயார் செய்து கொள்ள வேண்டும்.அது மாதிரி மோல்டு செய்யும் போது அடிபாகம் மூடப்படாமலும் ,நுனிபாகம் முக்கோண வடிவிலும் இருக்க வேண்டும்.இரண்டு பாகங்களும் பிரித்து எடுக்கும் போது தனி தனியாக வருவது போல் இருப்பது நலம்.அப்ப தான் மெழுகு வர்த்தி செய்த பின் அதை மோல்டு வில் இருந்து பிரிப்பது எளிது.

இது மாதிரி பல மோல்டுகள் செய்து ஒரு stand ல் தயாராக வைத்து இருக்க வேண்டும்.அவ்வாறு நிறுத்தி வைக்கும் மோல்டுகளில் மெழுகு வர்த்தி எரிவதற்கு நாடா அதாங்க திரி யை சிறிய கம்பியின் உதவியுடன் நிறுத்தி வைக்க வேண்டும்.



அப்புறம் வெள்ளை மெழுகுவை விட்டு இளஞ் சூட்டில் உருக்கி கொள்ளவும்.அதன் பின் அதில் ஸ்டெரிக் ஆசிடைச் சேர்க்கவும்.கடைசியாய் ஸின்க் ஆசிடைச் சேர்க்கவும்.இவ்வாறு
தயாரான திரவத்தை ஓர் கரண்டியால் அள்ளி வரிசையாய் நிறுத்தியுள்ள குழாய்களில் ஊற்றவும்.(விருப்பம் உள்ளவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்கள் கேட்டால் அது தனியா தருகிறேன்)

ஊற்றிய திரவம் ஆறிய பின் , மோல்டை பத்திரமாக பிரித்து எடுக்க வேண்டும்.அவ்வளவு தான்.

மெழுகு வர்த்திகளைப் பல வர்ணங்களில் தயாரிக்க விரும்புவோர் oil Red,oil Green,oil yellow ,oil Blue போன்ற எண்ணை வகைகளில் சேர்த்தால் சிவப்பு,பச்சை,மஞ்சள் , நீளம் மெழுகுவர்த்திகளை பெறலாம்.மெழுகு உருகிக் கொண்டிருக்கும் போது கலர் பவுடரைக் கலக்க வேண்டும்.


இந்த விபரங்கள் என்னோட பெரியப்பா மங்கைநல்லூர் சம்பந்தம் அவர்களின் கைத்தொழில் என்ற புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.

ஆன்டி கிராவிட்டி ஸ்பாட்

Tamilish
ஆன்டி கிராவிட்டி ஸ்பாட்.இது சலாலாவில் இருந்து சுமார் 60 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.இந்த இடத்தில் நீங்கள் காரை ஆஃப் பண்ணி அல்லது கியரை நியூட்ரலில் இட்டு பிரேக்கை எடுத்து விட்டால்,கார் பள்ளமான இடத்தில் இருந்து மேடான பகுதியை நோக்கி சுமார் 200 மிட்டர் தூரம் கார் நகரும்.

இவ்வாறு கார் நகருவதால் இந்த இடத்திற்கு ஆண்டி கிராவிட்டி ஸ்பாட் ( Anti Gravity Spot ) சொல்லுறாங்க.

வீடியோ (இரண்டு நிமிடம் தான்)பார்த்துட்டு நீங்களே சொல்லுங்கள்.இந்த வீடியோவில் இரண்டு கார்கள் நகருகிறது.முதல் காரை விட இரண்டாவது காரை பார்த்தால் நல்லா யோசனை கிடைக்கும்.



நம்புங்கள். கார் ஆஃப் ல தான் இருந்தது.ஆனால் நகருகிறது.

மேடான பகுதியில் இருந்து பள்ளமான பகுதியை நோக்கி கார் போவது இயற்கை.ஆனால் இங்கு எதனால் பள்ளத்தில் இருந்து மேடான பகுதியை நோக்கி நகருகிறது என்பது சரியாக தெரியவில்லை

அப்புறம் ஒரு செய்தி.பிரிட்டிஸ் அரசாங்கம் ஒரு முறை இந்த மலையை அவர்களுக்கு எழுதி கொடுத்தால் அவர்கள் அதற்கு பதிலாக மஸ்கட் முதல் சலாலா வரை இரயில் பாதை இலவசமாக அமைத்து தருவதாக உறுதி அளித்ததாகவும் ,அதற்கு ஒமன் நாட்டு அரசர் மறுத்ததாகவும் செய்தி ஓன்றும் கேள்விபட்டேன்.

அதிசயமாக தான் இருந்தது .ஆனால் உண்மை தாங்க.