தல்குத்

முஸ்தகையில் இருந்து தல் குத் போவதற்கு முன்பு பெட்ரோல் போட்டுவிட்டு புறப்படுவதற்கு முன்பு அடையாள அட்டை (Oman Resident Card ) சரிபார்த்துகொண்டு தல் குத் நோக்கி புறப்பட்டோம்.தல் குத் ஓமன் மற்றும் ஏமனின் எல்லை என்பதால் இரண்டு ஓமன் நாட்டு இராணுவ செக்போஸ்ட் உண்டு.அங்கு அடையாள அட்டை (Oman Resident Card ) சரிபார்க்க படும் .எனவே கவனம் தேவை.


மேலும் தல் குத் ரோடு மிகவும் கடினமாக இருக்கும். எப்போதும் 120 கி.மீ வேகத்திலேயே கார் ஓட்டி பழக்கபட்ட வர்களுக்கு அதிக பட்சமாக 40 கி.மீ வேகத்தில் ஓட்டுவது சோதனை தான்.அதற்கு மேல் கார் வேகம் செல்லாது என்பது வேறு விஷயம்.ரோடு மிகவும் செங்குத்தாக இருக்கிறது.
ஓரு வழியாக முஸ்தகையில் இருந்து 70 கி.மீ சென்றால் முதல் இராணுவ செக்போஸ்ட் இருக்கிறது.அங்கு செக்கிங் முடிந்ததும் அங்கிருந்து 3 கி.மீ தூரத்தில் இடது பக்கத்தில் உள்ள இடம் இதுஇங்கிருந்து நாங்கள் எல்லாம் கல்லை கடல் நோக்கி போட்டும் கல் கீழே எங்கே விழுகிறது என்பதை காணமுடியவில்லை.மலை உச்சிக்கும் கடலுக்கும் அவ்வளவு உயரம் இருக்கிறது.அங்கிருந்து தல்குத் போகும் போது சாலையின் இரு பக்கமும் இருக்கும் இயற்கை காட்சிகள்இரண்டாவது இராணுவ செக்போஸ்ட் கடந்து தல்குத் அடைந்தோம்.

அதன் அருகில் உள்ள மரம் இது. 200 வருடம் ஆகியும் உயரம் என்னவோ சுமார் 15 அடியை கூட எட்டவில்லை.அகலத்தில் மட்டும் வளருகிறது.அப்புறம் இந்த ஹெலிகாப்டர்.இதுபத்தி அங்கு உள்ளவர்கள் இது ஏமன் நாட்டு ஹெலிகாப்டர் என்றும்.அங்கு போர் நடைபெற்ற சமயத்தில் அந்த நாட்டு மன்னர் ஒரு ஹெலிகாப்டரிலும் மற்றோரு ஹெலிகாப்டரில் (இந்த ஹெலிகாப்டர்) முழுவதும் தங்கபிஸ்கட்டுடன் ஏமன் நாட்டை விட்டு தப்பித்து போனபோது விபத்து ஏற்பட்டதாக கூறினார்கள்.??கடைசியாக சர்பத் என்ற இந்த இடம்.நம்ம ஊர் தொட்டபேட்டா மாதிரி இருக்கிறது.மேககூட்டம் மற்றும் ஜில்லென்ற காற்றும் நம்மை வரவேற்பது நிச்சயம்இங்கு வந்த அனைவரும் சொல்லும் ஒரு டெம்பிளைட் வசனம். இந்த இடம் கல்ஃபா?
கண்டிப்பாக கல்ஃப் தான் இது சலாலாவின் ஓரு பகுதி.

தூணை பலப்படுத்துதல்

தீவிபத்தால் கடந்த ஆண்டு சலாலாவில் பாதிக்க பட்ட கட்டிடத்தின் தூணை(column)பலபடுத்த வேண்டும் (Strengthing) என்பது தான் இந்த வேலையின் முக்கியமான நோக்கம்.

அதற்காக தூணை முதலில் I section மூலம் தகுந்த முறையில் support கொடுத்த பின் தூணின் வெளிபுறம் உள்ள காங்கிரிட் (கவர் பகுதி) சுமார் 3 முதல் 5 CM வரை நீக்க பட்டன.
( புதிய காங்கிரிட்டை பழைய காங்கிரிட்டுடன் நன்றாக இணைவதற்கு)கட்டிடத்தின் தூணை பலபடுத்துவதற்கு ஆக 12 முதல் 18 வரை (வரைபடத்தில் உள்ளதுக்கு ஏற்ப )எண்ணிக்கையில் 16 MM diamter உள்ள கம்பியை காலத்தில் சேர்க்க வேண்டும்.அதற்காக Raft foundationலில் துளையிட்டு Epox coated கம்பிகள்
சொருகபட்டது.மேலும் தூணை பக்கவாட்டில் இணைப்பதற்கு L வடிவில் சிறிய கம்பி ஒரு மிட்டர் இடைவெளியில் பயன்படுத்தினோம்அதன் பின் Shuttering முடிந்த பின் Rheomix 121 என்ற admixture (இது புதிய காங்கிரிட்டை பழைய காங்கிரிட்டுடன் இணைக்க)உதவியுடன்,புதிய காங்கிரிட் மற்றும் புதிய காலம் உருவாக்கபடுகிறது.துறை சார்ந்த முதல் பதிவு .தவறுகள் வந்திருந்தால் மன்னிக்கவும்.
ஆலோசனைகள் வரவேற்கபடுகின்றன.

காற்று பை

பெரும்பாலும் கார்விபத்து ஏற்படும்போது நமது மார்புபகுதி, ஸ்டியரிங்க் அல்லது ஃடாஷ்போர்டில் மோதும்போது தான் விபத்து பாதிப்பு அதிகம். சில சமயங்களில் உயிர் இழப்பு ஏற்படுகின்றது.அதனை தவிர்பதற்க்கு தான் இந்த Air Bag (தமிழில் காற்று பை - சரியா?) அமைப்பு.விபத்துகாலங்களில் கார் மோதும்போது மோதும்வேகத்தை பொறுத்து தானகவே வெடித்துவெளியேவருமாறு அமைக்கபட்டுள்ளது.

விபத்தில் வெடித்த காற்று பை ஒன்று

முஸ்தகைல்

சலாலா-ஓமனின் ஒரு பகுதி என்று சொல்வதைவிட இந்தியாவின் (கேரளத்தின்)ஓரு பகுதி என்றால் அது மிக சரியானது. கல்ஃப்க்கு உரிய அதிக வெயில் ,அதிக குளிர் என எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் ,காலநிலை எப்போதும் இந்தியாவின் காலநிலையை ஓத்து இருக்கும்.குறிப்பாக ஜீலை மாதம் முதல் (மூன்று மாதத்திற்கு) கல்ஃப் நாட்டில் உள்ள அனைத்து பகுதியிலும் வெயில் அதிகமாக இருக்கும் போது ஜில்ஜில் என்ற மழையுடன் கூடிய கரிஃப் சீசனை மறக்க இயலாது.

சலாலாவில் இருந்துகொண்டு ஓவ்வொரு வாரவிடுமுறையின் போதும் எங்காவது போகணும் (ஆறு மாதம் ) என்ற ஆசை கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நிறைவேறியது..

காலை ஒரு வழியாக எட்டு மணிக்கு தல்குத் நோக்கி பயணம் தொடங்கினோம்.தொடங்கியவுடன் காரின் கிலோமீட்டர் 33333 என காட்ட அதை நண்பர் ஒருத்தர் சுட்டிகாட்ட பயணம் சற்று மகிழ்ச்சியுடன் தொடங்கியது..

சலாலாவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் தல்குத் போகும் வழியில் உள்ள ஓரு அழகான கடற்கரை முஸ்தகைலில்.சுமார் நான்கு கிலோமீட்டர் ரோடும், கடற்கரையும் இணையாக இருப்பது உண்மையில் ஓரு அழகு.இங்கு கடற்கரையுடன் ஓரு சிறிய குகையும் உண்டு.

கடற்கரையில் உள்ள பாறைகளில் உள்ள இடுக்குவழியாக அலை அடிக்கும் போகும் தண்ணீர் மேல் எழும்புவது இங்கு மிகவும் புகழ்பெற்றது.அதை எப்படியாவது போட்டோ எடுக்கணும் ரொம்ப நேரம் காத்து இருந்தும் நல்லா எடுக்க முடியவில்லை.வீடியோ எடுத்து இருக்கலாம் என இப்போது தோணுகிறது.இடுக்குவழியாக தண்ணீரை எதிர்பார்த்து காத்துஇருக்கிறார்கள்
சில நிமிடம் கழித்து தண்ணீர் வந்ததும்

20 நிமிடம் அங்கு இருந்துவிட்டு தல்குத் நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்