காதின் கேட்கும் திறன்

காதின் கேட்கும் திறன் முழுவதும் செவிப் புலனே சார்ந்தது ஆகும்.ஆம். மனிதனுக்கும் அவன் சார்ந்துள்ள சுற்றுச்சூழலுக்குமிடையே மிகப் பெரிய தொடர்பை செவிப் புலனே ஏற்படுத்துகிறது.எனவே அந்த செவிப்புலனே இழந்துவிடாதவாறு பாதுகாத்துக்
கொள்வது மிகவும் முக்கியமானது ஆகும்.

அதற்கான சில வழிமுறைகள்

காது ஒட்டையின் உள்ளே கொண்டை ஊசி ,பென்சில் ,தீக்குச்சி ,கோழி இறகு போன்ற
பொருட்களைச் செலுத்தி காதை சுத்தபடுத்த முயற்சிக்க வேண்டாம்.

அதிக ஒலியை தொடர்ந்து கேட்பது, நீங்கள் வேலை செய்யும்மிடம் அதிக ஓலியை எழுப்பும் இடமாக இருந்தால் உங்கள் செவிப்புலனை பாதிக்க சூடும்.

டைபாய்டு ஜீரம்,அம்மை போன்ற நோய்கள் கருவுற்றிருக்கும் போது ஏற்படும் எனில் அது பிறக்க இருக்கும் குழந்தையின் செவிப்புலனைப் பாதிக்கும்.

இதுமாதிரி பல காரணங்கள் இருக்கின்றன.செவிபுலன் பாதிப்பை முடிந்த வரை மீட்டு தர காது கேட்கும் கருவிகள் இப்போது பயன்பாட்டில் உள்ளன.

அதில் முக்கியமானவை

Behind the Ear
In the EarCompletely in the Canel
இது எல்லாம் நீங்கள் இழந்து இருக்கும் செவிபுலன் இழப்பு மற்றும் உங்களது கையிருப்பை
பொறுத்தது தான்..

நன்றி: மயூரா Hearing Eids -ரமேஷ்

மயிலாடுதுறை சுந்தரம் தியேட்டர்

ஒரு வருடம் ஊரில் இல்லாமல் ,திரும்பி
வந்தால் பல மாற்றங்கள் ஊரில் ஏற்படுவது இயற்கைதான்

ஆனால் இந்த முறை ஏற்பட்ட சில மாற்றங்கள் மனதை பாதித்தது.


இப்போது சுந்தரம் தியேட்டரின் நிலைபழைய காவிரி பாலம் இருந்த இடம்
ஆகிய இரண்டுக்கும் பிரியாவிடை கொடுத்துஇருக்கிறார்கள்..

வாஸ்து சாஸ்த்திரம்

கிழக்கு,மேற்கு,வடக்கு, மற்றும் தெற்கு என்ற வகையில் திசைகளை பொதுவாக நான்கு வகையாக பிரிக்கலாம்.ஆனால் வாஸ்துவில் திசைகளை வடகிழக்கு,வடமேற்கு,தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு என்ற வகையில் மேலும் பிரிக்கலாம்.

அவ்வாறு பிரித்த திசைகளுக்கு பெயர் பின்வருமாறு அழைக்கப்படுகிறது.

வடகிழக்கு - ஈசானிய மூலை
வடமேற்கு - வாயு மூலை
தென்கிழக்கு - அக்னி மூலை
தென்மேற்கு - கண்ணிமூலை

இதில்
வடகிழக்கு - ஈசானிய மூலை.மிகவும் புனிதமான மற்றும் சுத்தமான மூலை இது வாகும்.இங்கு தண்ணீர் தொட்டி அமைக்கலாம்.காங்கிரிட் முதல் வீட்டு மனை பூஜை வரை ஆரம்பிப்பது இங்கு தான்.
வடமேற்கு- வாயு மூலை.கழிவு நீர் தொட்டி அமைப்பது சிறந்தது
தென்மேற்கு - கண்ணிமூலை.இந்த மூலை மற்ற பகுதியை விட மேடாக இருக்க வேண்டும். overhead Tank அமைக்கிறார்கள்
தென்கிழக்கு - அக்னி மூலை.சமையல் அறை அமைக்க சிறந்த மூலை

இது மாதிரி பல வாஸ்து டிப்ஸ் இருக்கின்றன.இதில் எதுவெல்லாம் அறிவியல் பூர்வமானவை,அதற்கு காரணம் என்னவாக இருக்கலாம்? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

வாஸ்துவின் அடிப்படை இயற்கையாக கிடைக்கும் சூரிய ஓளி மற்றும் வெளிச்சம் ஆகியவற்றை நமது கட்டிடத்தில் அதிக அளவில் பயன்படுத்தி கொள்வது தான்.இது எப்படி சாத்தியமாகிறது என்பதை பார்க்கலாம்.

பூமி சுற்றும் போது அதன் ஆக்சிஸ் நேராக இல்லாமல் சற்று சாய்வாக 23 1/2 டிகிரி அளவில் சுற்றுவது எல்லாருக்கும் தெரிந்ததே.இதனால்தான் சூரிய ஓளி கிழக்கில் உதித்து மேற்கில் மறைவதற்கு முன்பு தெற்கில் விழுகிறது.

படத்தை பாருங்க.எனவே தான் கிழக்கு காலையிலும் , மேற்கு மாலையிலும் தெற்கு கிட்டதட்ட நாள் முழுவதிலும் ஓளியையும் பெறுகிறது.

மேலும் வடக்கு பகுதி குறைந்த அளவே ஓளியையும் ,வடகிழக்கு பகுதி முற்பகுதியிலும் வடமேற்கு பகுதி நாள் முழுவதும் கூலாகவே இருக்கிறது

எனவே நாம் வீடு அமைக்கும் போது திறந்த வெளி (open space ) எப்போதும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலும் அதிக அளவில் விடுவது நல்லது .அவ்வாறு அமைப்பதனால் இயற்கையாக கிடைக்கும் வெளிச்சத்தை பயன்படுத்தி கொள்ளலாம்

அதனால் தான் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக உயரமான மரமோ,சுவரோ எழுப்ப கூடாது.அதனால் தான் வாஸ்துவில் தென் மேற்கு பகுதியில் கட்டிடத்தை சற்று உயரமாக பண்ண சொல்லுறாங்க.

மேலும் வாஸ்து அடிப்படையில் ஒவ்வோரு அறைக்கும் எந்த அறை எங்கு
அமைக்கலாம் என்பதை கீழே பாருங்க

Bed -( NW-W-SW)- To receive plentiful of breeze in summer
Kitchen -( E-SE )-To receive morning sun which is germicidal
Dinning-(SE-S-SW)-proximity of kitchen .it should be cool
Drawing -(SE-S-SW-W)-Adequate nature lighting during winter
Reading -( N-NW )-Light from north being diffused and evenly distributed and cool
Store -(NW-N-NE)- Dark & cool

இந்த படத்தை பாருங்க.எளிமையா புரியும்அடடா.நம்ம வீடு வாஸ்து படி இல்லையே?என்ன பண்ணலாம் ரொம்ப யோசிச்சு சங்கம் வைத்தால் என்னையும் அதுல சேர்த்துக்குங்க..எங்க வீடும் அப்படி தாங்க இருக்கு..இருக்கிற வீட்டை வாஸ்து படி வீட்டை மாற்றி அமைக்க முயற்சி செய்தால் அதனால் ஆகும் செலவுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது.

பிளாட்

எலி வலையாய் இருந்தாலும் தனி வலையாய் இருக்கவேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப புதிய வீடு கட்டுவதற்காக இப்போது தனியாக பிளாட் வாங்க கிளம்பிட்டிங்களா?

ஒரு நிமிடம் .

நீங்க வாங்க போகும் வீட்டின் அளவு ,மற்றும் வடிவம் பற்றிய பதிவு தான் இது

வீட்டுமனையின் அளவு கண்டிப்பாக உங்களின் கையிருப்பின் அளவை பொறுத்ததுதான் ஆகும் .இருந்தாலும் பிளாட்டின் அளவு என்பது 60*40 அடியாக தான் இருக்கும்.மொத்த சதுர அடி 2400 சதுர அடியாகும்.பெரும்பாலும் 750 சதுர அடியில் வீடு கட்டுவதால் அரை பிளாட் 1200 சதுர அடியே போதுமானது தான்

அடுத்தது வீட்டு மனையின் வடிவம்.

நாம் அமைக்கும் அறைகளின் வடிவம் செவ்வக அல்லது சதுர வடிவமாகவே இருப்பதால் பெரும்பாலும் செவ்வக அல்லது சதுர வடிவ வீட்டு மனையே சிறந்தது.அது மாதிரி வீட்டுமனை இருந்தால் கட்டுமானத்தின் போது பிளாட்டின் அனைத்தும் பகுதிகளும் பயன்படுத்துவதால் இடம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் அறைகளும் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும்.உதாரணமாக கட்டில் இடுவது,பீரோவை அமைப்பது போன்ற வகைகளை எளிதாக பயன்படுத்தலாம்.

இந்த மாதிரி வடிவத்திற்கு முன்னுரிமை அளிக்கலாம்


இந்த மாதிரி வடிவங்களை தவிர்த்தல் நலம்.அடுத்தது வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம் பற்றிய பல விபரங்கள் உங்களக்கு தெரிந்து இருக்கும்.எனவே நான் பொறியியல் மற்றும் அறிவியல் பார்வையில் வாஸ்து பற்றி எனக்கு தெரிந்ததை உங்களளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கிழக்கு,மேற்கு,வடக்கு, மற்றும் தெற்கு என்ற வகையில் திசைகளை பொதுவாக நான்கு வகையாக பிரிக்கலாம்.ஆனால் வாஸ்துவில் திசைகளை வடகிழக்கு,வடமேற்கு,தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு என்ற வகையில் மேலும் பிரிக்கலாம்.

படத்தை பாருங்க.உங்களுக்கே தெரியும்.
அவ்வாறு பிரித்த திசைகளுக்கு பெயர் பின்வருமாறு அழைக்கப்படுகிறது.

வடகிழக்கு - ஈசானிய மூலை
வடமேற்கு - வாயு மூலை
தென்கிழக்கு - அக்னி மூலை


அடுத்த பதிவிலும் வாஸ்து பற்றிய அறிவியல் பார்வை தொடரும்.

(அ) ஆரம்பப் பள்ளி

இங்கு தான் நான் முதல்முறையாக அ,ஆ,........படித்த இடம் என்பதை பெருமையுடன் சொல்லுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த முறை ஊருக்கு போனபோது என் பள்ளியை பார்த்த போது பல நினைவுகள் திரும்பி பார்த்தன.

1959 ம் ஆரம்பிக்கப் பட்டாலும் நான் படிக்கும் போது எப்படி இருந்ததோ அது மாதிரி தான் இருந்தது.ஆனால் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது போல் தெரிகிறது.(எல்லாம் புதிதாக வளர்ந்துள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகளால் தாங்க)படிக்கும் போது எனக்கு ஆனா,ஆவண்ணா (அ,ஆ,இ,...அப்படி சொல்லி கொடுத்தால் கஷ்டமா இருக்கும்ல)சொல்லி கொடுத்த ஆசிரியர் தியாகராஜன் ஒய்வு பெற்று பள்ளிக்கு மிக அருகில் வசித்து வருகிறார்.இவர் ஆசிரியர் மட்டும் அல்ல.நல்ல கர்நாடக இசை பாடகரும் கூட.அவர் மேடையில் பாடும் போது அதன் அர்த்தம் புரியாவிட்டாலும் அவரது முக மாற்றங்கள் மற்றும் ராகத்திற்கு ஏற்ற கைஅசைவுகள் வசீகரமான குரல் ஆகியவவைகள் மிகவும் பிடிக்கும்.

தங்கையின் திருமணத்திற்கு சாரும் வந்த போது வேலை எப்படி இருக்கு? உணவு எப்படி இருக்கு?என்று என்னை பற்றிய சிந்தனை அவருக்குள் இருந்ததை உணர முடிந்தது. இது மாதிரி ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தது பாக்கியம் தான் .

அடுத்ததா நினைவுக்கு வரும் டிச்சர் பால்பினா டிச்சர்.தொடக்கப்பள்ளி என்பதால் விளையாட்டுக்கு அதிக முக்கியதுவம் இல்லாமல் இருந்தது .டிச்சர் வந்த பிறகு நிலையே வேறு.அவர்கள் நடத்திய ஓட்டப்பந்தயம் அப்போது வித்தியாசமான அனுபவம் தான்.

அப்புறம் தேர்வு சமயத்தில் இங்கு முக்கிய கேள்விகள் தந்து விடுவார்கள்.எனவே தேர்வு எல்லாம் சுமையாக தெரிந்ததில்லை.

நான் படித்த ஆரம்ப பள்ளிக்கு இதுவரை நான் சொல்லி கொள்ளும் அளவு எதுவும் செய்யாதது நெருடலாக தான் இருக்கிறது.அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பாக ஏதாவது செய்யனும் என்ற முடிவோடு தான் இருக்கிறேன்.

குசேலன் படம் பார்த்த போது நண்பர்களின் நினைவுகளால் வந்த கண்ணீரை தவிர்க்க இயலவில்லை. எனக்கு கூட சில நண்பர்கள் (முருகராஜ்,சுந்தர் மற்றும் மணி ) ஆகியோர் அந்தப்பள்ளி பருவத்தில் கிடைத்து இன்னமும் நண்பர்களாக தொடர்வதில் சந்தோசம் தாங்க.

அப்புறம் பள்ளி மூலம் கிடைத்த பால்ய நண்பன் சுந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்

ஒட்டகங்கள்

படிக்கும் காலத்தில் பாலைவன கப்பல் எது என்ற கேள்விக்கு பதிலாக தான் ஒட்டகம் அறிமுகம் ஆனது .அதன் பிறகு அப்ப அப்ப சர்க்கஸ் சென்றால் அங்கு அழகிகளின் அணி வகுப்பு மாதிரி ஓட்டங்களின் அணிவகுப்பை பார்த்த அனுபவம் உண்டு.

அப்புறம் இங்கு வந்த பிறகு பாலைவனத்தில் வேலை பார்க்க நேர்ந்த போது ஒட்டகத்தை பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நம்ம ஊர்ல ஆடு,மாடு வளர்ப்பதை போல் இங்கு ஓமனில் ஒட்டகத்தை வீட்டில் வளர்க்கிறார்கள்.ஒரே வித்தியாசம் பெட்ரோல் விலை குறைவு என்பதால் கார்ல சென்று ஒட்டகத்தை மேய்க்கிறார்கள்.பல சமயங்களில் உரிமையாளர்களுடன் உரிமையாக குழந்தை போல் பழகுகிறது.உருவம் தான் பெரியது.குழந்தை மனசு தான் போல.

அது மாதிரி ஒட்டகம் சாலையில் கடக்க நேர்ந்தால் ஒட்டகத்திற்கு வழி விட்டு தான்,பின்னர் அனைவரும் வாகனத்தில் சாலையை கடக்கிறார்கள்.மரியாதைக்கு இல்லங்க .பயம் தான்.ஒட்டகத்தின் மீது மோதினால் வாகனத்திற்கு அதிக சேதாரம் ஏற்படுவதுடன் செய்கூலியாக சுமார் ஒரு இலட்சம் வரை (ஒட்டகம் இறக்க நேர்ந்தால்) அபராதம் விதிக்கப்படுகிறது.ஒட்டகத்தின் முரட்டு நாக்கில் இருக்கும் சுவை அரும்புகள் படு மந்தமாம்.எனவே பலசமயங்களில் காய்ந்து போன குச்சிகள்,உலர்த்த இலை,தழைகளை என்று கிடைத்ததையெல்லாம் சாப்பிடுகிறது.தண்ணிர் தேவை பெரிய பிரச்சனையே இல்லை.அதற்கு பதில் எச்சிலை உபயோகிக்கிறது.அது மாதிரி சமயங்களில் எச்சிலின் அளவு 100 முதல் 180 லிட்டர் வரை சுரக்குமாம்.மேலும் சில ஒட்டகங்களுக்கு நீந்த தெரியுமாம்.

அப்புறம் ஒட்டக பால்.நண்பர்களின் வற்புறுத்தலினால் ஒரு முறை ஒட்டக பால் சாப்பிட நேர்ந்தது.சாப்பிட்ட பிறகு கடுமையான வயிற்று போக்கு..எல்லாம் முடிந்த பிறகு நண்பர் சொன்னார் முதல் முறையாக சாப்பிட்டால் அப்படி தான் இருக்கும்.அடுத்த முறை முயலலாமா என்று?

நன்றி ஆனந்தகுமாரின் பல்துறை தகவல்கள்

மெழுகு வர்த்தி

மெழுகு வர்த்தி தயாரிக்கும் முறை

தேவையான பொருள்கள்

வெள்ளை மெழுகு - 5 கிலோ
ஸ்டெரிக் ஆசிட்- 1.5 கிலோ
ஸின்க் ஆக்சைட் - 200 கிராம்

தேவையான அகல நீளத்தில் மோல்டுகள் (தகரக் குழாய்களில்) தயார் செய்து கொள்ள வேண்டும்.அது மாதிரி மோல்டு செய்யும் போது அடிபாகம் மூடப்படாமலும் ,நுனிபாகம் முக்கோண வடிவிலும் இருக்க வேண்டும்.இரண்டு பாகங்களும் பிரித்து எடுக்கும் போது தனி தனியாக வருவது போல் இருப்பது நலம்.அப்ப தான் மெழுகு வர்த்தி செய்த பின் அதை மோல்டு வில் இருந்து பிரிப்பது எளிது.

இது மாதிரி பல மோல்டுகள் செய்து ஒரு stand ல் தயாராக வைத்து இருக்க வேண்டும்.அவ்வாறு நிறுத்தி வைக்கும் மோல்டுகளில் மெழுகு வர்த்தி எரிவதற்கு நாடா அதாங்க திரி யை சிறிய கம்பியின் உதவியுடன் நிறுத்தி வைக்க வேண்டும்.அப்புறம் வெள்ளை மெழுகுவை விட்டு இளஞ் சூட்டில் உருக்கி கொள்ளவும்.அதன் பின் அதில் ஸ்டெரிக் ஆசிடைச் சேர்க்கவும்.கடைசியாய் ஸின்க் ஆசிடைச் சேர்க்கவும்.இவ்வாறு
தயாரான திரவத்தை ஓர் கரண்டியால் அள்ளி வரிசையாய் நிறுத்தியுள்ள குழாய்களில் ஊற்றவும்.(விருப்பம் உள்ளவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்கள் கேட்டால் அது தனியா தருகிறேன்)

ஊற்றிய திரவம் ஆறிய பின் , மோல்டை பத்திரமாக பிரித்து எடுக்க வேண்டும்.அவ்வளவு தான்.

மெழுகு வர்த்திகளைப் பல வர்ணங்களில் தயாரிக்க விரும்புவோர் oil Red,oil Green,oil yellow ,oil Blue போன்ற எண்ணை வகைகளில் சேர்த்தால் சிவப்பு,பச்சை,மஞ்சள் , நீளம் மெழுகுவர்த்திகளை பெறலாம்.மெழுகு உருகிக் கொண்டிருக்கும் போது கலர் பவுடரைக் கலக்க வேண்டும்.


இந்த விபரங்கள் என்னோட பெரியப்பா மங்கைநல்லூர் சம்பந்தம் அவர்களின் கைத்தொழில் என்ற புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.

ஆன்டி கிராவிட்டி ஸ்பாட்

Tamilish
ஆன்டி கிராவிட்டி ஸ்பாட்.இது சலாலாவில் இருந்து சுமார் 60 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.இந்த இடத்தில் நீங்கள் காரை ஆஃப் பண்ணி அல்லது கியரை நியூட்ரலில் இட்டு பிரேக்கை எடுத்து விட்டால்,கார் பள்ளமான இடத்தில் இருந்து மேடான பகுதியை நோக்கி சுமார் 200 மிட்டர் தூரம் கார் நகரும்.

இவ்வாறு கார் நகருவதால் இந்த இடத்திற்கு ஆண்டி கிராவிட்டி ஸ்பாட் ( Anti Gravity Spot ) சொல்லுறாங்க.

வீடியோ (இரண்டு நிமிடம் தான்)பார்த்துட்டு நீங்களே சொல்லுங்கள்.இந்த வீடியோவில் இரண்டு கார்கள் நகருகிறது.முதல் காரை விட இரண்டாவது காரை பார்த்தால் நல்லா யோசனை கிடைக்கும்.நம்புங்கள். கார் ஆஃப் ல தான் இருந்தது.ஆனால் நகருகிறது.

மேடான பகுதியில் இருந்து பள்ளமான பகுதியை நோக்கி கார் போவது இயற்கை.ஆனால் இங்கு எதனால் பள்ளத்தில் இருந்து மேடான பகுதியை நோக்கி நகருகிறது என்பது சரியாக தெரியவில்லை

அப்புறம் ஒரு செய்தி.பிரிட்டிஸ் அரசாங்கம் ஒரு முறை இந்த மலையை அவர்களுக்கு எழுதி கொடுத்தால் அவர்கள் அதற்கு பதிலாக மஸ்கட் முதல் சலாலா வரை இரயில் பாதை இலவசமாக அமைத்து தருவதாக உறுதி அளித்ததாகவும் ,அதற்கு ஒமன் நாட்டு அரசர் மறுத்ததாகவும் செய்தி ஓன்றும் கேள்விபட்டேன்.

அதிசயமாக தான் இருந்தது .ஆனால் உண்மை தாங்க.

தல்குத்

முஸ்தகையில் இருந்து தல் குத் போவதற்கு முன்பு பெட்ரோல் போட்டுவிட்டு புறப்படுவதற்கு முன்பு அடையாள அட்டை (Oman Resident Card ) சரிபார்த்துகொண்டு தல் குத் நோக்கி புறப்பட்டோம்.தல் குத் ஓமன் மற்றும் ஏமனின் எல்லை என்பதால் இரண்டு ஓமன் நாட்டு இராணுவ செக்போஸ்ட் உண்டு.அங்கு அடையாள அட்டை (Oman Resident Card ) சரிபார்க்க படும் .எனவே கவனம் தேவை.


மேலும் தல் குத் ரோடு மிகவும் கடினமாக இருக்கும். எப்போதும் 120 கி.மீ வேகத்திலேயே கார் ஓட்டி பழக்கபட்ட வர்களுக்கு அதிக பட்சமாக 40 கி.மீ வேகத்தில் ஓட்டுவது சோதனை தான்.அதற்கு மேல் கார் வேகம் செல்லாது என்பது வேறு விஷயம்.ரோடு மிகவும் செங்குத்தாக இருக்கிறது.
ஓரு வழியாக முஸ்தகையில் இருந்து 70 கி.மீ சென்றால் முதல் இராணுவ செக்போஸ்ட் இருக்கிறது.அங்கு செக்கிங் முடிந்ததும் அங்கிருந்து 3 கி.மீ தூரத்தில் இடது பக்கத்தில் உள்ள இடம் இதுஇங்கிருந்து நாங்கள் எல்லாம் கல்லை கடல் நோக்கி போட்டும் கல் கீழே எங்கே விழுகிறது என்பதை காணமுடியவில்லை.மலை உச்சிக்கும் கடலுக்கும் அவ்வளவு உயரம் இருக்கிறது.அங்கிருந்து தல்குத் போகும் போது சாலையின் இரு பக்கமும் இருக்கும் இயற்கை காட்சிகள்இரண்டாவது இராணுவ செக்போஸ்ட் கடந்து தல்குத் அடைந்தோம்.

அதன் அருகில் உள்ள மரம் இது. 200 வருடம் ஆகியும் உயரம் என்னவோ சுமார் 15 அடியை கூட எட்டவில்லை.அகலத்தில் மட்டும் வளருகிறது.அப்புறம் இந்த ஹெலிகாப்டர்.இதுபத்தி அங்கு உள்ளவர்கள் இது ஏமன் நாட்டு ஹெலிகாப்டர் என்றும்.அங்கு போர் நடைபெற்ற சமயத்தில் அந்த நாட்டு மன்னர் ஒரு ஹெலிகாப்டரிலும் மற்றோரு ஹெலிகாப்டரில் (இந்த ஹெலிகாப்டர்) முழுவதும் தங்கபிஸ்கட்டுடன் ஏமன் நாட்டை விட்டு தப்பித்து போனபோது விபத்து ஏற்பட்டதாக கூறினார்கள்.??கடைசியாக சர்பத் என்ற இந்த இடம்.நம்ம ஊர் தொட்டபேட்டா மாதிரி இருக்கிறது.மேககூட்டம் மற்றும் ஜில்லென்ற காற்றும் நம்மை வரவேற்பது நிச்சயம்இங்கு வந்த அனைவரும் சொல்லும் ஒரு டெம்பிளைட் வசனம். இந்த இடம் கல்ஃபா?
கண்டிப்பாக கல்ஃப் தான் இது சலாலாவின் ஓரு பகுதி.

தூணை பலப்படுத்துதல்

தீவிபத்தால் கடந்த ஆண்டு சலாலாவில் பாதிக்க பட்ட கட்டிடத்தின் தூணை(column)பலபடுத்த வேண்டும் (Strengthing) என்பது தான் இந்த வேலையின் முக்கியமான நோக்கம்.

அதற்காக தூணை முதலில் I section மூலம் தகுந்த முறையில் support கொடுத்த பின் தூணின் வெளிபுறம் உள்ள காங்கிரிட் (கவர் பகுதி) சுமார் 3 முதல் 5 CM வரை நீக்க பட்டன.
( புதிய காங்கிரிட்டை பழைய காங்கிரிட்டுடன் நன்றாக இணைவதற்கு)கட்டிடத்தின் தூணை பலபடுத்துவதற்கு ஆக 12 முதல் 18 வரை (வரைபடத்தில் உள்ளதுக்கு ஏற்ப )எண்ணிக்கையில் 16 MM diamter உள்ள கம்பியை காலத்தில் சேர்க்க வேண்டும்.அதற்காக Raft foundationலில் துளையிட்டு Epox coated கம்பிகள்
சொருகபட்டது.மேலும் தூணை பக்கவாட்டில் இணைப்பதற்கு L வடிவில் சிறிய கம்பி ஒரு மிட்டர் இடைவெளியில் பயன்படுத்தினோம்அதன் பின் Shuttering முடிந்த பின் Rheomix 121 என்ற admixture (இது புதிய காங்கிரிட்டை பழைய காங்கிரிட்டுடன் இணைக்க)உதவியுடன்,புதிய காங்கிரிட் மற்றும் புதிய காலம் உருவாக்கபடுகிறது.துறை சார்ந்த முதல் பதிவு .தவறுகள் வந்திருந்தால் மன்னிக்கவும்.
ஆலோசனைகள் வரவேற்கபடுகின்றன.

காற்று பை

பெரும்பாலும் கார்விபத்து ஏற்படும்போது நமது மார்புபகுதி, ஸ்டியரிங்க் அல்லது ஃடாஷ்போர்டில் மோதும்போது தான் விபத்து பாதிப்பு அதிகம். சில சமயங்களில் உயிர் இழப்பு ஏற்படுகின்றது.அதனை தவிர்பதற்க்கு தான் இந்த Air Bag (தமிழில் காற்று பை - சரியா?) அமைப்பு.விபத்துகாலங்களில் கார் மோதும்போது மோதும்வேகத்தை பொறுத்து தானகவே வெடித்துவெளியேவருமாறு அமைக்கபட்டுள்ளது.

விபத்தில் வெடித்த காற்று பை ஒன்று

முஸ்தகைல்

சலாலா-ஓமனின் ஒரு பகுதி என்று சொல்வதைவிட இந்தியாவின் (கேரளத்தின்)ஓரு பகுதி என்றால் அது மிக சரியானது. கல்ஃப்க்கு உரிய அதிக வெயில் ,அதிக குளிர் என எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் ,காலநிலை எப்போதும் இந்தியாவின் காலநிலையை ஓத்து இருக்கும்.குறிப்பாக ஜீலை மாதம் முதல் (மூன்று மாதத்திற்கு) கல்ஃப் நாட்டில் உள்ள அனைத்து பகுதியிலும் வெயில் அதிகமாக இருக்கும் போது ஜில்ஜில் என்ற மழையுடன் கூடிய கரிஃப் சீசனை மறக்க இயலாது.

சலாலாவில் இருந்துகொண்டு ஓவ்வொரு வாரவிடுமுறையின் போதும் எங்காவது போகணும் (ஆறு மாதம் ) என்ற ஆசை கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நிறைவேறியது..

காலை ஒரு வழியாக எட்டு மணிக்கு தல்குத் நோக்கி பயணம் தொடங்கினோம்.தொடங்கியவுடன் காரின் கிலோமீட்டர் 33333 என காட்ட அதை நண்பர் ஒருத்தர் சுட்டிகாட்ட பயணம் சற்று மகிழ்ச்சியுடன் தொடங்கியது..

சலாலாவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் தல்குத் போகும் வழியில் உள்ள ஓரு அழகான கடற்கரை முஸ்தகைலில்.சுமார் நான்கு கிலோமீட்டர் ரோடும், கடற்கரையும் இணையாக இருப்பது உண்மையில் ஓரு அழகு.இங்கு கடற்கரையுடன் ஓரு சிறிய குகையும் உண்டு.

கடற்கரையில் உள்ள பாறைகளில் உள்ள இடுக்குவழியாக அலை அடிக்கும் போகும் தண்ணீர் மேல் எழும்புவது இங்கு மிகவும் புகழ்பெற்றது.அதை எப்படியாவது போட்டோ எடுக்கணும் ரொம்ப நேரம் காத்து இருந்தும் நல்லா எடுக்க முடியவில்லை.வீடியோ எடுத்து இருக்கலாம் என இப்போது தோணுகிறது.இடுக்குவழியாக தண்ணீரை எதிர்பார்த்து காத்துஇருக்கிறார்கள்
சில நிமிடம் கழித்து தண்ணீர் வந்ததும்

20 நிமிடம் அங்கு இருந்துவிட்டு தல்குத் நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்