(அ) ஆரம்பப் பள்ளி

இங்கு தான் நான் முதல்முறையாக அ,ஆ,........படித்த இடம் என்பதை பெருமையுடன் சொல்லுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த முறை ஊருக்கு போனபோது என் பள்ளியை பார்த்த போது பல நினைவுகள் திரும்பி பார்த்தன.

1959 ம் ஆரம்பிக்கப் பட்டாலும் நான் படிக்கும் போது எப்படி இருந்ததோ அது மாதிரி தான் இருந்தது.ஆனால் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது போல் தெரிகிறது.(எல்லாம் புதிதாக வளர்ந்துள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகளால் தாங்க)



படிக்கும் போது எனக்கு ஆனா,ஆவண்ணா (அ,ஆ,இ,...அப்படி சொல்லி கொடுத்தால் கஷ்டமா இருக்கும்ல)சொல்லி கொடுத்த ஆசிரியர் தியாகராஜன் ஒய்வு பெற்று பள்ளிக்கு மிக அருகில் வசித்து வருகிறார்.இவர் ஆசிரியர் மட்டும் அல்ல.நல்ல கர்நாடக இசை பாடகரும் கூட.அவர் மேடையில் பாடும் போது அதன் அர்த்தம் புரியாவிட்டாலும் அவரது முக மாற்றங்கள் மற்றும் ராகத்திற்கு ஏற்ற கைஅசைவுகள் வசீகரமான குரல் ஆகியவவைகள் மிகவும் பிடிக்கும்.

தங்கையின் திருமணத்திற்கு சாரும் வந்த போது வேலை எப்படி இருக்கு? உணவு எப்படி இருக்கு?என்று என்னை பற்றிய சிந்தனை அவருக்குள் இருந்ததை உணர முடிந்தது. இது மாதிரி ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தது பாக்கியம் தான் .

அடுத்ததா நினைவுக்கு வரும் டிச்சர் பால்பினா டிச்சர்.தொடக்கப்பள்ளி என்பதால் விளையாட்டுக்கு அதிக முக்கியதுவம் இல்லாமல் இருந்தது .டிச்சர் வந்த பிறகு நிலையே வேறு.அவர்கள் நடத்திய ஓட்டப்பந்தயம் அப்போது வித்தியாசமான அனுபவம் தான்.

அப்புறம் தேர்வு சமயத்தில் இங்கு முக்கிய கேள்விகள் தந்து விடுவார்கள்.எனவே தேர்வு எல்லாம் சுமையாக தெரிந்ததில்லை.

நான் படித்த ஆரம்ப பள்ளிக்கு இதுவரை நான் சொல்லி கொள்ளும் அளவு எதுவும் செய்யாதது நெருடலாக தான் இருக்கிறது.அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பாக ஏதாவது செய்யனும் என்ற முடிவோடு தான் இருக்கிறேன்.

குசேலன் படம் பார்த்த போது நண்பர்களின் நினைவுகளால் வந்த கண்ணீரை தவிர்க்க இயலவில்லை. எனக்கு கூட சில நண்பர்கள் (முருகராஜ்,சுந்தர் மற்றும் மணி ) ஆகியோர் அந்தப்பள்ளி பருவத்தில் கிடைத்து இன்னமும் நண்பர்களாக தொடர்வதில் சந்தோசம் தாங்க.

அப்புறம் பள்ளி மூலம் கிடைத்த பால்ய நண்பன் சுந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்

21 கருத்துகள்:

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

கொசுவத்தி வாசனையா இருக்கு.

பத்மநாபன் சொன்னது…

அற்புதம் மின்னல் ... ஆரம்ப பள்ளி நாட்களின் சுகமே சுகம் . அது போன்ற சுகமான கால கட்டம் மனிதனுக்கு திரும்பவும் வரவே வராது..
படமாகவும் , பதிவாகவும் இட்டு பள்ளிக்கு சிறப்பு செய்து விட்டீர்கள் .

அகல்விளக்கு சொன்னது…

நெகிழ்வான இடுகை....

Thamiz Priyan சொன்னது…

பள்ளி நினைவுகள் எப்போதும் அலாதியான ருசிகரங்களைக் கொண்டவை!

Unknown சொன்னது…

கருத்துரைக்கு நன்றி
சைவகொத்துப்பரோட்டா
பத்ம நாபன்
அகல்விளக்கு
தமிழ்பிரியன்

ஜெய்லானி சொன்னது…

இணிமையான நினைவலைகள்.

Unknown சொன்னது…

நன்றி ஜெய்லானி .தங்கள் முதல் வருகைக்கும் ,கருத்துரைக்கும்.தொடர்ந்து வாங்க

சாமக்கோடங்கி சொன்னது…

இனிய நினைவுகள்.. என் பழைய நினைவுகளைத் தூண்டி விட்டு விட்டீர்..

நன்றி..

Unknown சொன்னது…

பிரகாஷ் அப்ப அடுத்த பதிவில் உங்கள் பள்ளி நினைவுகளை பற்றி எழுதி விடுங்கள்.

அன்புடன் நான் சொன்னது…

சுந்தருக்கு இந்த முகம் தெரியாதவனின்.... வாழ்த்துக்கள்...

பள்ளி நினைவு.... ஈரம்
பகிர்வுக்கு பராட்டுக்கள்.

Unknown சொன்னது…

முகம் தெரியாதவரை வாழ்த்த பெரிய மனது வேனும்.வாழ்த்துக்கு நன்றி கருணா

Raghu சொன்னது…

இந்த‌ மாதிரி ஒரு ஆசிரிய‌ரை பார்ப்ப‌து அபூர்வ‌ம்!

Priya சொன்னது…

இனிமையான நினைவுகள்!

DREAMER சொன்னது…

உங்கள் பள்ளிக்கூடத்தைப் பற்றி படிக்கும்போது, படிப்பவர்கள் அவரவர்களின் பள்ளிக்கூடத்தை நினைத்துப்பார்ப்பதை தவிர்க்க முடியாது. அந்த அற்புதான உணர்வை தந்தமைக்கு நன்றி...

-
DREAMER

Unknown சொன்னது…

அது மாதிரி ஆசிரியர் அமைந்தது என்னுடைய பாக்கியம் தான். நன்றி ரகு.

Unknown சொன்னது…

கருத்துக்கு நன்றி dreamer.

Unknown சொன்னது…

முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க.
தியாவுக்கும்
பிரியாவிக்கும்

goma சொன்னது…

பள்ளிக்கூடம் எல்லோர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு தலம்,அதன் புராணத்தை சொல்லிக் கொண்டே போகலாம்

அருமையாக நெகிழ்ந்து எல்லோரையும் நெகிழவைத்து விட்டீர்கள் விட்டீர்கள்...

அண்ணாமலையான் சொன்னது…

ரைட்டு

Unknown சொன்னது…

முதல் வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி கோமா

Unknown சொன்னது…

நன்றி அண்ணாமலையான்

கருத்துரையிடுக