பிளாட்

எலி வலையாய் இருந்தாலும் தனி வலையாய் இருக்கவேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப புதிய வீடு கட்டுவதற்காக இப்போது தனியாக பிளாட் வாங்க கிளம்பிட்டிங்களா?

ஒரு நிமிடம் .

நீங்க வாங்க போகும் வீட்டின் அளவு ,மற்றும் வடிவம் பற்றிய பதிவு தான் இது

வீட்டுமனையின் அளவு கண்டிப்பாக உங்களின் கையிருப்பின் அளவை பொறுத்ததுதான் ஆகும் .இருந்தாலும் பிளாட்டின் அளவு என்பது 60*40 அடியாக தான் இருக்கும்.மொத்த சதுர அடி 2400 சதுர அடியாகும்.பெரும்பாலும் 750 சதுர அடியில் வீடு கட்டுவதால் அரை பிளாட் 1200 சதுர அடியே போதுமானது தான்

அடுத்தது வீட்டு மனையின் வடிவம்.

நாம் அமைக்கும் அறைகளின் வடிவம் செவ்வக அல்லது சதுர வடிவமாகவே இருப்பதால் பெரும்பாலும் செவ்வக அல்லது சதுர வடிவ வீட்டு மனையே சிறந்தது.அது மாதிரி வீட்டுமனை இருந்தால் கட்டுமானத்தின் போது பிளாட்டின் அனைத்தும் பகுதிகளும் பயன்படுத்துவதால் இடம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் அறைகளும் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும்.உதாரணமாக கட்டில் இடுவது,பீரோவை அமைப்பது போன்ற வகைகளை எளிதாக பயன்படுத்தலாம்.

இந்த மாதிரி வடிவத்திற்கு முன்னுரிமை அளிக்கலாம்


இந்த மாதிரி வடிவங்களை தவிர்த்தல் நலம்.அடுத்தது வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம் பற்றிய பல விபரங்கள் உங்களக்கு தெரிந்து இருக்கும்.எனவே நான் பொறியியல் மற்றும் அறிவியல் பார்வையில் வாஸ்து பற்றி எனக்கு தெரிந்ததை உங்களளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கிழக்கு,மேற்கு,வடக்கு, மற்றும் தெற்கு என்ற வகையில் திசைகளை பொதுவாக நான்கு வகையாக பிரிக்கலாம்.ஆனால் வாஸ்துவில் திசைகளை வடகிழக்கு,வடமேற்கு,தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு என்ற வகையில் மேலும் பிரிக்கலாம்.

படத்தை பாருங்க.உங்களுக்கே தெரியும்.
அவ்வாறு பிரித்த திசைகளுக்கு பெயர் பின்வருமாறு அழைக்கப்படுகிறது.

வடகிழக்கு - ஈசானிய மூலை
வடமேற்கு - வாயு மூலை
தென்கிழக்கு - அக்னி மூலை


அடுத்த பதிவிலும் வாஸ்து பற்றிய அறிவியல் பார்வை தொடரும்.

13 கருத்துகள்:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

தொடருங்கள்..

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

தொடருங்கள், காத்திருக்கிறோம்.

நாமக்கல் சிபி சொன்னது…

நன்று

பத்மநாபன் சொன்னது…

மின்னல் .. அனைவர்க்கும் தேவையான பதிவு . இதை தொடர வேண்டும் .. சுருக்கமாக இருந்தால் சுகம் என்று பார்க்கிரிர்கள் . இன்னமும் கொஞ்சம் சேர்த்து கொள்ளலாம் .. படங்களும் அருமை .. பிளாட் ல் தனி விடு போல் ... ..அடுக்கு குடியிருப்பில் எது எதை பார்க்கவேண்டும் என்பதையும் பதியுங்கள் .. நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் ...ஊடு கட்டி பதியுங்கள்....
( பதிவு போட அழைத்தமைக்கு நன்றி ... என்ன விஷயம் என்றால் , பதிவுகளை படிப்பதே ஒரு போதை போல் ஆகி விட்டது ..எழுதுவதை விட படிப்பதிலேயே நேரம் போய் விடுகிறது . முயற்சி செய்கிறேன் விரைவில் பதிவிட )

மின்னல் சொன்னது…

நன்றி
ஷங்கர்
பரோட்டா
நாமக்கல் சிபி

மின்னல் சொன்னது…

நன்றி பத்மநாபன்.எனக்கு தெரிந்ததை பதிவிடுகிறேன்

ஆயில்யன் சொன்னது…

துறை சார்ந்த பதிவுகள் நிறைய தகவல்களோடு எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் தொடருங்கள் நண்பா!

வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி சொன்னது…

உபயோகமான தகவல்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

மின்னல் சொன்னது…

சரி நண்பா.நன்றாக எழுத முயற்சி செய்கிறேன்

மின்னல் சொன்னது…

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ராமலெஷ்சுமி

ர‌கு சொன்னது…

ப‌ய‌னுள்ள‌ ப‌கிர்வு

ஜெரி ஈசானந்தன். சொன்னது…

கலக்குங்க மின்னல்.

மின்னல் சொன்னது…

கருத்துரைக்கு நன்றிங்க
ரகு
ஜெரி

கருத்துரையிடுக