ஒட்டகங்கள்

படிக்கும் காலத்தில் பாலைவன கப்பல் எது என்ற கேள்விக்கு பதிலாக தான் ஒட்டகம் அறிமுகம் ஆனது .அதன் பிறகு அப்ப அப்ப சர்க்கஸ் சென்றால் அங்கு அழகிகளின் அணி வகுப்பு மாதிரி ஓட்டங்களின் அணிவகுப்பை பார்த்த அனுபவம் உண்டு.

அப்புறம் இங்கு வந்த பிறகு பாலைவனத்தில் வேலை பார்க்க நேர்ந்த போது ஒட்டகத்தை பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நம்ம ஊர்ல ஆடு,மாடு வளர்ப்பதை போல் இங்கு ஓமனில் ஒட்டகத்தை வீட்டில் வளர்க்கிறார்கள்.ஒரே வித்தியாசம் பெட்ரோல் விலை குறைவு என்பதால் கார்ல சென்று ஒட்டகத்தை மேய்க்கிறார்கள்.பல சமயங்களில் உரிமையாளர்களுடன் உரிமையாக குழந்தை போல் பழகுகிறது.உருவம் தான் பெரியது.குழந்தை மனசு தான் போல.

அது மாதிரி ஒட்டகம் சாலையில் கடக்க நேர்ந்தால் ஒட்டகத்திற்கு வழி விட்டு தான்,பின்னர் அனைவரும் வாகனத்தில் சாலையை கடக்கிறார்கள்.மரியாதைக்கு இல்லங்க .பயம் தான்.ஒட்டகத்தின் மீது மோதினால் வாகனத்திற்கு அதிக சேதாரம் ஏற்படுவதுடன் செய்கூலியாக சுமார் ஒரு இலட்சம் வரை (ஒட்டகம் இறக்க நேர்ந்தால்) அபராதம் விதிக்கப்படுகிறது.



ஒட்டகத்தின் முரட்டு நாக்கில் இருக்கும் சுவை அரும்புகள் படு மந்தமாம்.எனவே பலசமயங்களில் காய்ந்து போன குச்சிகள்,உலர்த்த இலை,தழைகளை என்று கிடைத்ததையெல்லாம் சாப்பிடுகிறது.தண்ணிர் தேவை பெரிய பிரச்சனையே இல்லை.அதற்கு பதில் எச்சிலை உபயோகிக்கிறது.அது மாதிரி சமயங்களில் எச்சிலின் அளவு 100 முதல் 180 லிட்டர் வரை சுரக்குமாம்.மேலும் சில ஒட்டகங்களுக்கு நீந்த தெரியுமாம்.

அப்புறம் ஒட்டக பால்.நண்பர்களின் வற்புறுத்தலினால் ஒரு முறை ஒட்டக பால் சாப்பிட நேர்ந்தது.சாப்பிட்ட பிறகு கடுமையான வயிற்று போக்கு..எல்லாம் முடிந்த பிறகு நண்பர் சொன்னார் முதல் முறையாக சாப்பிட்டால் அப்படி தான் இருக்கும்.அடுத்த முறை முயலலாமா என்று?

நன்றி ஆனந்தகுமாரின் பல்துறை தகவல்கள்

13 கருத்துகள்:

Unknown சொன்னது…

intersting & useful information.thks

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

அப்படியா...தகவலுக்கு நன்றி தல.

பத்மநாபன் சொன்னது…

மின்னல் ... நான் எங்கள் வனத்தில் உள்ளே சென்று ஒட்டகங்களை படமெல்லாம் எடுத்து வைத்தேன் பதிவு போட..
நான் குறிப்பிட நினைத்த விஷயங்களை அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள் ... வாழ்த்துக்கள் .
ஒட்டகப்பால் விஷயமாக மண்ணின் மைந்தர்கள் நிறைய சொல்லிருப்பார்களே ........
முயற்சி செய்யலாம் தப்பில்லை ... அதற்க்கான பருவம் தான் :)

Unknown சொன்னது…

நன்றி பத்மநாபன்.ஒட்டகம் பற்றிய உங்களது பதிவை எதிர்பார்க்கிறேன்.என்னைவிட நீங்கள் பதிந்தால் அது பொருத்தமாக இருக்கும்.ஒட்டக பால் வாய்ப்பு கிடைத்தால் இன்னொருமுறை பார்த்துட வேண்டியது தான்

அன்புடன் நான் சொன்னது…

தகவலுக்கு நன்றிங்க

Unknown சொன்னது…

கருத்துரைக்கு நன்றி கருணா

Unknown சொன்னது…

பாஸ்.தல அப்படினு மட்டும் இப்ப சொல்லாதீங்க.நன்றி நண்பரே

DREAMER சொன்னது…

நல்ல தகவல்கள்...

Raghu சொன்னது…

//சுமார் ஒரு இலட்சம் வரை (ஒட்டகம் இறக்க நேர்ந்தால்) அபராதம் விதிக்கப்படுகிறது//

உயிரை ம‌திக்க‌ தெரிஞ்ச‌வ‌ங்க‌ இன்னும் இருக்காங்க‌ போல‌:)

பாதி ப‌டிக்கும்போதே வ‌டிவேலுவோட‌ "ஒட்ட‌க‌ப் பால்ல‌ டீ போட்றா" ஜோக் ஞாப‌க‌த்துக்கு வ‌ந்துடுச்சு:)))

Unknown சொன்னது…

நன்றி ரகு.

Unknown சொன்னது…

கருத்துரைக்கு நன்றி dreamer

அண்ணாமலையான் சொன்னது…

நல்ல தகவல்கள்...

Unknown சொன்னது…

வாங்க அண்ணாமலையான்.நன்றி

கருத்துரையிடுக