தூணை பலப்படுத்துதல்

தீவிபத்தால் கடந்த ஆண்டு சலாலாவில் பாதிக்க பட்ட கட்டிடத்தின் தூணை(column)பலபடுத்த வேண்டும் (Strengthing) என்பது தான் இந்த வேலையின் முக்கியமான நோக்கம்.

அதற்காக தூணை முதலில் I section மூலம் தகுந்த முறையில் support கொடுத்த பின் தூணின் வெளிபுறம் உள்ள காங்கிரிட் (கவர் பகுதி) சுமார் 3 முதல் 5 CM வரை நீக்க பட்டன.
( புதிய காங்கிரிட்டை பழைய காங்கிரிட்டுடன் நன்றாக இணைவதற்கு)



கட்டிடத்தின் தூணை பலபடுத்துவதற்கு ஆக 12 முதல் 18 வரை (வரைபடத்தில் உள்ளதுக்கு ஏற்ப )எண்ணிக்கையில் 16 MM diamter உள்ள கம்பியை காலத்தில் சேர்க்க வேண்டும்.அதற்காக Raft foundationலில் துளையிட்டு Epox coated கம்பிகள்
சொருகபட்டது.



மேலும் தூணை பக்கவாட்டில் இணைப்பதற்கு L வடிவில் சிறிய கம்பி ஒரு மிட்டர் இடைவெளியில் பயன்படுத்தினோம்



அதன் பின் Shuttering முடிந்த பின் Rheomix 121 என்ற admixture (இது புதிய காங்கிரிட்டை பழைய காங்கிரிட்டுடன் இணைக்க)உதவியுடன்,புதிய காங்கிரிட் மற்றும் புதிய காலம் உருவாக்கபடுகிறது.



துறை சார்ந்த முதல் பதிவு .தவறுகள் வந்திருந்தால் மன்னிக்கவும்.
ஆலோசனைகள் வரவேற்கபடுகின்றன.

6 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

நல்ல பல விபரங்களை கொடுத்துள்ளீர்கள்.எப்போதாவது தேவைப்பட்டால் உபயோகப்படுத்திய சிமிண்ட் விபரங்கள் உதவியாக இருக்கும்.
எனக்கு இருக்கும் சில சந்தேகங்கள்..
இம்முறையை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு தீயின் கோரத்தால் Column த்தின் உள்ளே உள்ள கம்பி பாதிக்கப்பட்டிருக்கா என்று சோதனை எதுவும் செய்தீர்களா?கான்கிரீட் சோதனை எதுவும் செய்யப்பட்டதா? வலுவிழுந்திருக்கு என்று எப்படி நிர்ணயம் செய்தீர்கள்?
ஒரு படத்தில் Slab கம்பி வேறு தெரிகிறது! Cover கம்மியா இல்லை நீங்கள் உடைத்து மராமத்து செய்ய காத்திருக்கிறீர்களா?
இன்னும் நிறைய இம்மாதிரி பதிவுகளை போடவும்.

வடுவூர் குமார் சொன்னது…

அதற்காக காலத்திற்கு முதலில் I section மூலம் தகுந்த முறையில் support

கோவி கண்ணன் கோபித்துக்கொள்ள போகிறார்,எனக்கே சப்போர்டா என்று. :-))

Unknown சொன்னது…

கருத்துரைக்கு நன்றி குமார்.தீயின் பாதிப்பு column த்தின் உள்ளே உள்ள கம்பி வரை செல்லவில்லை.சோதனைகளுக்கு பின்னர் தான் வலுவிழுந்து இருக்கிறது என்பதை கண்டறிந்தோம்.அதன் விபரங்களை பின்னர் மற்றோரு பதிவாக இடுகிறேன்.அந்த slab கம்பி தெரிவது cover இல்லாததால் வந்தது தான்.

Unknown சொன்னது…

தவறை சுட்டிகாட்டியதுற்கு நன்றி குமார்.அது காலம் கிடையாது.தூண் என இருக்கவேண்டும்.இப்போது மாற்றிவிட்டேன்.நன்றி.

குப்பன்.யாஹூ சொன்னது…

salalah & tumrait are nice places. I love salalah Indian hotel uduppi bavan (near NBO bank main branch)

Unknown சொன்னது…

நீங்கள் சொன்னது மிக சரி குப்பன்.இப்போது சலாலாவில் இரண்டு உடுப்பி Hotel கள்.

கருத்துரையிடுக