அப்புறம் இங்கு வந்த பிறகு பாலைவனத்தில் வேலை பார்க்க நேர்ந்த போது ஒட்டகத்தை பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நம்ம ஊர்ல ஆடு,மாடு வளர்ப்பதை போல் இங்கு ஓமனில் ஒட்டகத்தை வீட்டில் வளர்க்கிறார்கள்.ஒரே வித்தியாசம் பெட்ரோல் விலை குறைவு என்பதால் கார்ல சென்று ஒட்டகத்தை மேய்க்கிறார்கள்.பல சமயங்களில் உரிமையாளர்களுடன் உரிமையாக குழந்தை போல் பழகுகிறது.உருவம் தான் பெரியது.குழந்தை மனசு தான் போல.
அது மாதிரி ஒட்டகம் சாலையில் கடக்க நேர்ந்தால் ஒட்டகத்திற்கு வழி விட்டு தான்,பின்னர் அனைவரும் வாகனத்தில் சாலையை கடக்கிறார்கள்.மரியாதைக்கு இல்லங்க .பயம் தான்.ஒட்டகத்தின் மீது மோதினால் வாகனத்திற்கு அதிக சேதாரம் ஏற்படுவதுடன் செய்கூலியாக சுமார் ஒரு இலட்சம் வரை (ஒட்டகம் இறக்க நேர்ந்தால்) அபராதம் விதிக்கப்படுகிறது.
ஒட்டகத்தின் முரட்டு நாக்கில் இருக்கும் சுவை அரும்புகள் படு மந்தமாம்.எனவே பலசமயங்களில் காய்ந்து போன குச்சிகள்,உலர்த்த இலை,தழைகளை என்று கிடைத்ததையெல்லாம் சாப்பிடுகிறது.தண்ணிர் தேவை பெரிய பிரச்சனையே இல்லை.அதற்கு பதில் எச்சிலை உபயோகிக்கிறது.அது மாதிரி சமயங்களில் எச்சிலின் அளவு 100 முதல் 180 லிட்டர் வரை சுரக்குமாம்.மேலும் சில ஒட்டகங்களுக்கு நீந்த தெரியுமாம்.
அப்புறம் ஒட்டக பால்.நண்பர்களின் வற்புறுத்தலினால் ஒரு முறை ஒட்டக பால் சாப்பிட நேர்ந்தது.சாப்பிட்ட பிறகு கடுமையான வயிற்று போக்கு..எல்லாம் முடிந்த பிறகு நண்பர் சொன்னார் முதல் முறையாக சாப்பிட்டால் அப்படி தான் இருக்கும்.அடுத்த முறை முயலலாமா என்று?
நன்றி ஆனந்தகுமாரின் பல்துறை தகவல்கள்