கிழக்கு,மேற்கு,வடக்கு, மற்றும் தெற்கு என்ற வகையில் திசைகளை பொதுவாக நான்கு வகையாக பிரிக்கலாம்.ஆனால் வாஸ்துவில் திசைகளை வடகிழக்கு,வடமேற்கு,தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு என்ற வகையில் மேலும் பிரிக்கலாம்.
அவ்வாறு பிரித்த திசைகளுக்கு பெயர் பின்வருமாறு அழைக்கப்படுகிறது.
வடகிழக்கு - ஈசானிய மூலை
வடமேற்கு - வாயு மூலை
தென்கிழக்கு - அக்னி மூலை
தென்மேற்கு - கண்ணிமூலை
இதில்
வடகிழக்கு - ஈசானிய மூலை.மிகவும் புனிதமான மற்றும் சுத்தமான மூலை இது வாகும்.இங்கு தண்ணீர் தொட்டி அமைக்கலாம்.காங்கிரிட் முதல் வீட்டு மனை பூஜை வரை ஆரம்பிப்பது இங்கு தான்.
வடமேற்கு- வாயு மூலை.கழிவு நீர் தொட்டி அமைப்பது சிறந்தது
தென்மேற்கு - கண்ணிமூலை.இந்த மூலை மற்ற பகுதியை விட மேடாக இருக்க வேண்டும். overhead Tank அமைக்கிறார்கள்
தென்கிழக்கு - அக்னி மூலை.சமையல் அறை அமைக்க சிறந்த மூலை
இது மாதிரி பல வாஸ்து டிப்ஸ் இருக்கின்றன.இதில் எதுவெல்லாம் அறிவியல் பூர்வமானவை,அதற்கு காரணம் என்னவாக இருக்கலாம்? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
வாஸ்துவின் அடிப்படை இயற்கையாக கிடைக்கும் சூரிய ஓளி மற்றும் வெளிச்சம் ஆகியவற்றை நமது கட்டிடத்தில் அதிக அளவில் பயன்படுத்தி கொள்வது தான்.இது எப்படி சாத்தியமாகிறது என்பதை பார்க்கலாம்.
பூமி சுற்றும் போது அதன் ஆக்சிஸ் நேராக இல்லாமல் சற்று சாய்வாக 23 1/2 டிகிரி அளவில் சுற்றுவது எல்லாருக்கும் தெரிந்ததே.இதனால்தான் சூரிய ஓளி கிழக்கில் உதித்து மேற்கில் மறைவதற்கு முன்பு தெற்கில் விழுகிறது.
படத்தை பாருங்க.
எனவே தான் கிழக்கு காலையிலும் , மேற்கு மாலையிலும் தெற்கு கிட்டதட்ட நாள் முழுவதிலும் ஓளியையும் பெறுகிறது.
மேலும் வடக்கு பகுதி குறைந்த அளவே ஓளியையும் ,வடகிழக்கு பகுதி முற்பகுதியிலும் வடமேற்கு பகுதி நாள் முழுவதும் கூலாகவே இருக்கிறது
எனவே நாம் வீடு அமைக்கும் போது திறந்த வெளி (open space ) எப்போதும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலும் அதிக அளவில் விடுவது நல்லது .அவ்வாறு அமைப்பதனால் இயற்கையாக கிடைக்கும் வெளிச்சத்தை பயன்படுத்தி கொள்ளலாம்
அதனால் தான் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக உயரமான மரமோ,சுவரோ எழுப்ப கூடாது.அதனால் தான் வாஸ்துவில் தென் மேற்கு பகுதியில் கட்டிடத்தை சற்று உயரமாக பண்ண சொல்லுறாங்க.
மேலும் வாஸ்து அடிப்படையில் ஒவ்வோரு அறைக்கும் எந்த அறை எங்கு
அமைக்கலாம் என்பதை கீழே பாருங்க
Bed -( NW-W-SW)- To receive plentiful of breeze in summer
Kitchen -( E-SE )-To receive morning sun which is germicidal
Dinning-(SE-S-SW)-proximity of kitchen .it should be cool
Drawing -(SE-S-SW-W)-Adequate nature lighting during winter
Reading -( N-NW )-Light from north being diffused and evenly distributed and cool
Store -(NW-N-NE)- Dark & cool
இந்த படத்தை பாருங்க.எளிமையா புரியும்
அடடா.நம்ம வீடு வாஸ்து படி இல்லையே?என்ன பண்ணலாம் ரொம்ப யோசிச்சு சங்கம் வைத்தால் என்னையும் அதுல சேர்த்துக்குங்க..எங்க வீடும் அப்படி தாங்க இருக்கு..இருக்கிற வீட்டை வாஸ்து படி வீட்டை மாற்றி அமைக்க முயற்சி செய்தால் அதனால் ஆகும் செலவுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
18 கருத்துகள்:
இதற்காக பலர் லட்சகணக்கில் செலவு செய்கிறார்கள் அதில் ஒருவரை நேரடியாகவும் சந்தித்தேன்.வேலையில்லாத இந்நாட்களில் இவர்களாவது வேலை கொடுக்கிறார்களே!!
ரொம்ப வெளிச்சம் / காற்று வேண்டுமென்றால் வெட்டவெளி தான் சரி. :-)
வாஸ்து சாஸ்திரம் பற்றி
தெளிவா இருக்கு, உங்க விளக்கங்கள்,
நன்றி.
வாஸ்து - பற்றிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி நண்பா!
இதற்காக வீட்டையே இடித்து புது வீடு கட்டுமளவு காசினை செலவழித்து மாற்றம் செய்பவர்களை நினைத்தால் நிசமாவே டெரராத்தான் இருக்கு!
வீடெல்லாம் கட்டியாச்சு.. இனி இடிச்சி கட்டனும்ன்னா நீங்க தான் பணம் தரணும்.. பரவா இல்லையா?.. ;-)))
வருகைக்கும் கருத்துரைக்கு நன்றி
குமார்
சைவபுரோட்டா
ஆயில்யன் நண்பா
அய்யோ .அது மாதிரி ரிஸ்க்னா எடுக்காதீங்க தமிழ்
எனக்கும் வாஸ்து சாஸ்திரம் கொஞ்சம் பிடிக்கும்.
அதற்காக அவர்கள் பரிந்துரைக்கும் பொம்மைகள் ,அதன் பிரயோசனம் எல்லாம் அறிந்து செய்தால் வாஸ்துவும் பலன் தரத்தான் செய்கிறது.
இந்திய பாரம்பரியக் கலயான கோலமும்,வாஸ்துவின் அடிப்படையில் இருக்கிறது .என்ன ஒரு வித்தியாசம் ,வீட்டுப் பெரியவர்களுக்கு அவைகளைக் காரணத்தோடு விளக்கத் தெரியவில்லை.
விளக்கம் அருமை
இதையே வெளியில் கன்ஸல்ட் பண்ணியிருந்தா ஒரு 2000 ரூபாய் தீட்டியிருப்பாங்க!
நீங்க ரொம்ப நல்லவருங்க :)))
என்னத்தச்சொல்ல இப்படியும் சிலபேர் இருக்காங்களே இடித்து இடித்துகட்ட.. நல்ல பதிவு.
நேரம்கிடைக்கும்போது இதையும் பாருங்க
http://fmalikka.blogspot.com
http://niroodai.blogspot.com
வாஸ்து குறித்த எனது மாற்று பார்வை இங்கே
என் வரையில் நமக்கு எது வசதியோ அதை பார்த்து வீடு கட்டினால் போதும். வீட்டினுள் நல்ல வெளிச்சமும், காற்றோட்டமும் வரும் வகையில் அமைத்தாலோ போதும்.
வாஸ்து எனும் வஸ்துவை பொருட்படுத்த வேண்டியதில்லை.
//எனக்கும் வாஸ்து சாஸ்திரம் கொஞ்சம் பிடிக்கும்.
அதற்காக அவர்கள் பரிந்துரைக்கும் பொம்மைகள் ,அதன் பிரயோசனம் எல்லாம் அறிந்து செய்தால் வாஸ்துவும் பலன் தரத்தான் செய்கிறது.//
உண்மைதான் கோமா.நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
மலிக்கா,ஜெகநாதன்,கண்ணா
எனக்கு பதிவுலகில் கிடைத்த முதல் விருது இது
நன்றி ஜெய்லானி
வாஸ்து பற்றிய உங்கள் சுருக்கமான ஆனால் தெளிவான இடுகைக்கு நன்றி.
வலை வாய்ப்பு குறைவாக இருந்ததால் , சற்று தாமதமாகிவிட்டது ... வாஸ்து விபரங்கள் அறிவியலை வைத்து வழங்கி உள்ளீர்கள் ...வாஸ்து....கடவுள் மாதிரி நம்பிக்கையை மையமாக கொண்டு பயன் பெறுபவர்கள் பெறுகிறார்கள் ..சிலர் ஏமாறுகிறார்கள் ..சிலர் ஏமாற்றபடுகிறார்கள்... தொழில்நுட்பம் சார்ந்து தொடர்ந்து வாஸ்துவில் உள்ள நல்ல விஷயங்கள் சொல்லுங்கள் ...
கருத்துரையிடுக