1959 ம் ஆரம்பிக்கப் பட்டாலும் நான் படிக்கும் போது எப்படி இருந்ததோ அது மாதிரி தான் இருந்தது.ஆனால் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது போல் தெரிகிறது.(எல்லாம் புதிதாக வளர்ந்துள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகளால் தாங்க)

படிக்கும் போது எனக்கு ஆனா,ஆவண்ணா (அ,ஆ,இ,...அப்படி சொல்லி கொடுத்தால் கஷ்டமா இருக்கும்ல)சொல்லி கொடுத்த ஆசிரியர் தியாகராஜன் ஒய்வு பெற்று பள்ளிக்கு மிக அருகில் வசித்து வருகிறார்.இவர் ஆசிரியர் மட்டும் அல்ல.நல்ல கர்நாடக இசை பாடகரும் கூட.அவர் மேடையில் பாடும் போது அதன் அர்த்தம் புரியாவிட்டாலும் அவரது முக மாற்றங்கள் மற்றும் ராகத்திற்கு ஏற்ற கைஅசைவுகள் வசீகரமான குரல் ஆகியவவைகள் மிகவும் பிடிக்கும்.
தங்கையின் திருமணத்திற்கு சாரும் வந்த போது வேலை எப்படி இருக்கு? உணவு எப்படி இருக்கு?என்று என்னை பற்றிய சிந்தனை அவருக்குள் இருந்ததை உணர முடிந்தது. இது மாதிரி ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தது பாக்கியம் தான் .
அடுத்ததா நினைவுக்கு வரும் டிச்சர் பால்பினா டிச்சர்.தொடக்கப்பள்ளி என்பதால் விளையாட்டுக்கு அதிக முக்கியதுவம் இல்லாமல் இருந்தது .டிச்சர் வந்த பிறகு நிலையே வேறு.அவர்கள் நடத்திய ஓட்டப்பந்தயம் அப்போது வித்தியாசமான அனுபவம் தான்.
அப்புறம் தேர்வு சமயத்தில் இங்கு முக்கிய கேள்விகள் தந்து விடுவார்கள்.எனவே தேர்வு எல்லாம் சுமையாக தெரிந்ததில்லை.
நான் படித்த ஆரம்ப பள்ளிக்கு இதுவரை நான் சொல்லி கொள்ளும் அளவு எதுவும் செய்யாதது நெருடலாக தான் இருக்கிறது.அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பாக ஏதாவது செய்யனும் என்ற முடிவோடு தான் இருக்கிறேன்.
குசேலன் படம் பார்த்த போது நண்பர்களின் நினைவுகளால் வந்த கண்ணீரை தவிர்க்க இயலவில்லை. எனக்கு கூட சில நண்பர்கள் (முருகராஜ்,சுந்தர் மற்றும் மணி ) ஆகியோர் அந்தப்பள்ளி பருவத்தில் கிடைத்து இன்னமும் நண்பர்களாக தொடர்வதில் சந்தோசம் தாங்க.
அப்புறம் பள்ளி மூலம் கிடைத்த பால்ய நண்பன் சுந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்
