மெழுகு வர்த்தி தயாரிக்கும் முறை
தேவையான பொருள்கள்
வெள்ளை மெழுகு - 5 கிலோ
ஸ்டெரிக் ஆசிட்- 1.5 கிலோ
ஸின்க் ஆக்சைட் - 200 கிராம்
தேவையான அகல நீளத்தில் மோல்டுகள் (தகரக் குழாய்களில்) தயார் செய்து கொள்ள வேண்டும்.அது மாதிரி மோல்டு செய்யும் போது அடிபாகம் மூடப்படாமலும் ,நுனிபாகம் முக்கோண வடிவிலும் இருக்க வேண்டும்.இரண்டு பாகங்களும் பிரித்து எடுக்கும் போது தனி தனியாக வருவது போல் இருப்பது நலம்.அப்ப தான் மெழுகு வர்த்தி செய்த பின் அதை மோல்டு வில் இருந்து பிரிப்பது எளிது.
இது மாதிரி பல மோல்டுகள் செய்து ஒரு stand ல் தயாராக வைத்து இருக்க வேண்டும்.அவ்வாறு நிறுத்தி வைக்கும் மோல்டுகளில் மெழுகு வர்த்தி எரிவதற்கு நாடா அதாங்க திரி யை சிறிய கம்பியின் உதவியுடன் நிறுத்தி வைக்க வேண்டும்.
அப்புறம் வெள்ளை மெழுகுவை விட்டு இளஞ் சூட்டில் உருக்கி கொள்ளவும்.அதன் பின் அதில் ஸ்டெரிக் ஆசிடைச் சேர்க்கவும்.கடைசியாய் ஸின்க் ஆசிடைச் சேர்க்கவும்.இவ்வாறு
தயாரான திரவத்தை ஓர் கரண்டியால் அள்ளி வரிசையாய் நிறுத்தியுள்ள குழாய்களில் ஊற்றவும்.(விருப்பம் உள்ளவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்கள் கேட்டால் அது தனியா தருகிறேன்)
ஊற்றிய திரவம் ஆறிய பின் , மோல்டை பத்திரமாக பிரித்து எடுக்க வேண்டும்.அவ்வளவு தான்.
மெழுகு வர்த்திகளைப் பல வர்ணங்களில் தயாரிக்க விரும்புவோர் oil Red,oil Green,oil yellow ,oil Blue போன்ற எண்ணை வகைகளில் சேர்த்தால் சிவப்பு,பச்சை,மஞ்சள் , நீளம் மெழுகுவர்த்திகளை பெறலாம்.மெழுகு உருகிக் கொண்டிருக்கும் போது கலர் பவுடரைக் கலக்க வேண்டும்.
இந்த விபரங்கள் என்னோட பெரியப்பா மங்கைநல்லூர் சம்பந்தம் அவர்களின் கைத்தொழில் என்ற புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
12 கருத்துகள்:
5 rupaa kuttha pothume en ippidi
தகவலுக்கு நன்றி நண்பரே.
அப்பாடா கைத்தொழில் ஒன்ன கத்துக்கிட்டாச்சு...
உங்கள் பதிவை பார்த்தவுடன் பாரதி தாசனின் பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வந்தது ''கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் ..கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் '' . மெழுகு தயாரித்தல்
பற்றி மிக எளிமையாக புரியும்படி எழுதியுள்ள உங்கள் பெரியப்பா அவர்களுக்கு வணக்கமான வாழ்த்து
அதை அழகான படத்தோடு இடுகை இட்ட உங்களுக்கு நன்றி ....
வேளாங்கண்ணியில் இத்தொழில் நான் சிறுவனாக இருந்த போது பலர் பண்ண பார்த்திருக்கேன் ஆனால் இன்று தான் எப்படி என்று தெரிந்துகொண்டேன்.
மெழுகு வர்த்தி வெளிச்சம் பரவட்டும்... பாராட்டுக்கள்.
அருமையான பயனுள்ள பகிர்வு நண்பா, தொடர்ந்து எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாங்க சங்கர்.சும்மா ரிஸ்க் எடுக்க தான் இது மாதிரி முயற்சி.
கருத்துரைக்கு நன்றி
அண்ணாமலையான்
வடுவூர் குமார்
கருணா
சசி
மற்றும்
கொத்துபுரோட்டா வுக்கு
megavum payan ullathaga erunthathu,
megavum payan ullathaga erunthathu,
megavum payan ullathaga erunthathu,
கருத்துரையிடுக