முஸ்தகையில் இருந்து தல் குத் போவதற்கு முன்பு பெட்ரோல் போட்டுவிட்டு புறப்படுவதற்கு முன்பு அடையாள அட்டை (Oman Resident Card ) சரிபார்த்துகொண்டு தல் குத் நோக்கி புறப்பட்டோம்.தல் குத் ஓமன் மற்றும் ஏமனின் எல்லை என்பதால் இரண்டு ஓமன் நாட்டு இராணுவ செக்போஸ்ட் உண்டு.அங்கு அடையாள அட்டை (Oman Resident Card ) சரிபார்க்க படும் .எனவே கவனம் தேவை.
மேலும் தல் குத் ரோடு மிகவும் கடினமாக இருக்கும். எப்போதும் 120 கி.மீ வேகத்திலேயே கார் ஓட்டி பழக்கபட்ட வர்களுக்கு அதிக பட்சமாக 40 கி.மீ வேகத்தில் ஓட்டுவது சோதனை தான்.அதற்கு மேல் கார் வேகம் செல்லாது என்பது வேறு விஷயம்.ரோடு மிகவும் செங்குத்தாக இருக்கிறது.
ஓரு வழியாக முஸ்தகையில் இருந்து 70 கி.மீ சென்றால் முதல் இராணுவ செக்போஸ்ட் இருக்கிறது.அங்கு செக்கிங் முடிந்ததும் அங்கிருந்து 3 கி.மீ தூரத்தில் இடது பக்கத்தில் உள்ள இடம் இது
இங்கிருந்து நாங்கள் எல்லாம் கல்லை கடல் நோக்கி போட்டும் கல் கீழே எங்கே விழுகிறது என்பதை காணமுடியவில்லை.மலை உச்சிக்கும் கடலுக்கும் அவ்வளவு உயரம் இருக்கிறது.
அங்கிருந்து தல்குத் போகும் போது சாலையின் இரு பக்கமும் இருக்கும் இயற்கை காட்சிகள்
இரண்டாவது இராணுவ செக்போஸ்ட் கடந்து தல்குத் அடைந்தோம்.
அதன் அருகில் உள்ள மரம் இது. 200 வருடம் ஆகியும் உயரம் என்னவோ சுமார் 15 அடியை கூட எட்டவில்லை.அகலத்தில் மட்டும் வளருகிறது.
அப்புறம் இந்த ஹெலிகாப்டர்.இதுபத்தி அங்கு உள்ளவர்கள் இது ஏமன் நாட்டு ஹெலிகாப்டர் என்றும்.அங்கு போர் நடைபெற்ற சமயத்தில் அந்த நாட்டு மன்னர் ஒரு ஹெலிகாப்டரிலும் மற்றோரு ஹெலிகாப்டரில் (இந்த ஹெலிகாப்டர்) முழுவதும் தங்கபிஸ்கட்டுடன் ஏமன் நாட்டை விட்டு தப்பித்து போனபோது விபத்து ஏற்பட்டதாக கூறினார்கள்.??
கடைசியாக சர்பத் என்ற இந்த இடம்.நம்ம ஊர் தொட்டபேட்டா மாதிரி இருக்கிறது.மேககூட்டம் மற்றும் ஜில்லென்ற காற்றும் நம்மை வரவேற்பது நிச்சயம்
இங்கு வந்த அனைவரும் சொல்லும் ஒரு டெம்பிளைட் வசனம். இந்த இடம் கல்ஃபா?
கண்டிப்பாக கல்ஃப் தான் இது சலாலாவின் ஓரு பகுதி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
10 கருத்துகள்:
படமும் இடமும் அருமையாக இருக்கு.எல்லா மாதங்களும் இப்படியா இல்லை சில மாதங்கள் மட்டுமா?
ஜீலை முதல் நான்கு மாதத்திற்கு இப்படி தான் இருக்கிறது.
ரொம்ப உயரம் போன உடனே கீழே பார்த்து ஏதாவது எறிய தோன்றுவது ஏன் நண்பரே,,?? :))
படங்கள் அருமை.
அழகான படங்கள்
பலா.உயரத்தை அறிய குறும்புகார நண்பர் ஓருவருவர் கொடுத்த ஜடியா அது
நன்றி அண்ணாமலையான்
சலாலா பற்றிய புகைப்படங்கள் மற்று பதிவிற்கு நன்றி.
தும்ரைத் பற்றியும் எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.
நான் சொன்ன உடுப்பி உணவகம், என்பியோ வங்கி அருகில் இருக்கும், அதன் எதிர்புறம் திறந்த புல் மைதானம், அதன் அருகில் தீ அணைப்பு நிலையம் இருக்கும். நான் சொல்லும் கதை ஆறு வருடங்களுக்கு முன்பு.
நன்றி குப்பன் நண்பரே.தும்ரிதை பற்றி கண்டிப்பாக எழுதுகிறேன்.இப்போது திறந்த புல் மைதானம் உள்ள இடத்தில் அழகான மசூதி ஓன்று இருக்கு.
மின்னல் .... நன்றி வந்து வாழ்த்தியமைக்கு .. இன்று தான் உங்கள் பதிவுகளை பார்வையிட்டேன்
அழகான படங்களோடு அருமையாக பதிக்கிறீர்கள்.... சலாலா பதிவுகள் ''ஊ .. லலா.. ல'' போடவைக்கின்றன ..
நான் உங்கள் அருகில் தான் உள்ளேன் 600 கீ. மி வடக்கே ''முகைஸ்நா'' என்ற முழு பாலைவனம் .
உண்மையில் நீங்கள் இருக்குமிடம் தான் '' சோலை'' .. நீங்களும் தொடருங்கள் .. தொடர்ந்து வலையில் சந்திப்போம் .. வாய்ப்பு கூடினால் நேரிலும் .
ஓ.அந்த இடமா?கேள்விபட்டு இருக்கிறேன்.கருத்துரைக்கு நன்றி பத்மநாபன்.கண்டிப்பாக நேரில் சந்திப்போம்.அது வரை இனையத்தில்...
கருத்துரையிடுக