சலாலா-ஓமனின் ஒரு பகுதி என்று சொல்வதைவிட இந்தியாவின் (கேரளத்தின்)ஓரு பகுதி என்றால் அது மிக சரியானது. கல்ஃப்க்கு உரிய அதிக வெயில் ,அதிக குளிர் என எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் ,காலநிலை எப்போதும் இந்தியாவின் காலநிலையை ஓத்து இருக்கும்.குறிப்பாக ஜீலை மாதம் முதல் (மூன்று மாதத்திற்கு) கல்ஃப் நாட்டில் உள்ள அனைத்து பகுதியிலும் வெயில் அதிகமாக இருக்கும் போது ஜில்ஜில் என்ற மழையுடன் கூடிய கரிஃப் சீசனை மறக்க இயலாது.
சலாலாவில் இருந்துகொண்டு ஓவ்வொரு வாரவிடுமுறையின் போதும் எங்காவது போகணும் (ஆறு மாதம் ) என்ற ஆசை கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நிறைவேறியது..
காலை ஒரு வழியாக எட்டு மணிக்கு தல்குத் நோக்கி பயணம் தொடங்கினோம்.தொடங்கியவுடன் காரின் கிலோமீட்டர் 33333 என காட்ட அதை நண்பர் ஒருத்தர் சுட்டிகாட்ட பயணம் சற்று மகிழ்ச்சியுடன் தொடங்கியது..
சலாலாவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் தல்குத் போகும் வழியில் உள்ள ஓரு அழகான கடற்கரை முஸ்தகைலில்.சுமார் நான்கு கிலோமீட்டர் ரோடும், கடற்கரையும் இணையாக இருப்பது உண்மையில் ஓரு அழகு.இங்கு கடற்கரையுடன் ஓரு சிறிய குகையும் உண்டு.
கடற்கரையில் உள்ள பாறைகளில் உள்ள இடுக்குவழியாக அலை அடிக்கும் போகும் தண்ணீர் மேல் எழும்புவது இங்கு மிகவும் புகழ்பெற்றது.அதை எப்படியாவது போட்டோ எடுக்கணும் ரொம்ப நேரம் காத்து இருந்தும் நல்லா எடுக்க முடியவில்லை.வீடியோ எடுத்து இருக்கலாம் என இப்போது தோணுகிறது.
இடுக்குவழியாக தண்ணீரை எதிர்பார்த்து காத்துஇருக்கிறார்கள்
சில நிமிடம் கழித்து தண்ணீர் வந்ததும்
20 நிமிடம் அங்கு இருந்துவிட்டு தல்குத் நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 கருத்துகள்:
ஊர் சுத்திக்கிட்டிருக்கீங்களா நண்பா நடக்கட்டும் நடக்கட்டும்! :)
இன்னும் சற்று பெரிய இடுகையாக இடலாமோ?? தொடருங்கள்.
ஆயில்யன் நண்பா.சலாலாவில் நிறைய இடங்கள் இருக்கு.ஊர் சுத்திக்கிட்டு இருப்பதை தவிர வேறு வழியில்லை
ஆலோசனைக்கு நன்றி மோகன்.அடுத்த முறை முயல்கிறேன்.
இது போன்ற வெளிநாட்டு நிகழ்வுகளை இதே போல் அதிகம் படையுங்கள். சிறப்பு.
நன்றி ஜோதிஜி.
அட! இங்கு தான் இருக்கிறீர்களா?
சலாலா பற்றி கேள்விப்பட்டுள்ளேன் இன்னும் அங்கு வர நேரம் வாய்க்கவில்லை.
வரும் போது என்னை மறக்காமல் அழையுங்கள் குமார்.நேரில் சந்திப்போம்.
கருத்துரையிடுக