சலாலாவில் இருந்துகொண்டு ஓவ்வொரு வாரவிடுமுறையின் போதும் எங்காவது போகணும் (ஆறு மாதம் ) என்ற ஆசை கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நிறைவேறியது..
காலை ஒரு வழியாக எட்டு மணிக்கு தல்குத் நோக்கி பயணம் தொடங்கினோம்.தொடங்கியவுடன் காரின் கிலோமீட்டர் 33333 என காட்ட அதை நண்பர் ஒருத்தர் சுட்டிகாட்ட பயணம் சற்று மகிழ்ச்சியுடன் தொடங்கியது..
சலாலாவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் தல்குத் போகும் வழியில் உள்ள ஓரு அழகான கடற்கரை முஸ்தகைலில்.சுமார் நான்கு கிலோமீட்டர் ரோடும், கடற்கரையும் இணையாக இருப்பது உண்மையில் ஓரு அழகு.இங்கு கடற்கரையுடன் ஓரு சிறிய குகையும் உண்டு.
கடற்கரையில் உள்ள பாறைகளில் உள்ள இடுக்குவழியாக அலை அடிக்கும் போகும் தண்ணீர் மேல் எழும்புவது இங்கு மிகவும் புகழ்பெற்றது.அதை எப்படியாவது போட்டோ எடுக்கணும் ரொம்ப நேரம் காத்து இருந்தும் நல்லா எடுக்க முடியவில்லை.வீடியோ எடுத்து இருக்கலாம் என இப்போது தோணுகிறது.
இடுக்குவழியாக தண்ணீரை எதிர்பார்த்து காத்துஇருக்கிறார்கள்
சில நிமிடம் கழித்து தண்ணீர் வந்ததும்
20 நிமிடம் அங்கு இருந்துவிட்டு தல்குத் நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்